search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விஜயகாந், எடப்பாடி பழனிசாமி - கோப்புப்படம்
    X
    விஜயகாந், எடப்பாடி பழனிசாமி - கோப்புப்படம்

    இன்று பிறந்தநாள் - விஜயகாந்துக்கு, எடப்பாடி பழனிசாமி வாழ்த்து

    தே.மு.தி.க. நிறுவனர் விஜயகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்
    சென்னை:

    தே.மு.தி.க. நிறுவனர் விஜயகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று அனுப்பிய வாழ்த்துச் செய்தியில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    25-ந் தேதியன்று (இன்று) பிறந்தநாளை கொண்டாடும் தங்களுக்கு என் உளம் நிறைந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

    திரைப்படத்துறை, அரசியல் மற்றும் பொதுவாழ்வில் சிறப்பாக பணியாற்றி, நன்முத்திரை பதித்து வரும் தாங்கள் நல்ல உடல் நலத்துடனும், நீண்ட ஆயுளுடனும், நீடுழி வாழ்ந்து தொடர்ந்து மக்கள் பணியாற்ற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

    தங்களுக்கு எனது இதயம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துகளை மீண்டும் ஒரு முறை அன்போடு தெரிவித்துக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    தே.மு.தி.க. நிறுவனத் தலைவர் விஜயகாந்த்துக்கு துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். 
    Next Story
    ×