என் மலர்

  செய்திகள்

  திலீப் - சரஸ்வதி
  X
  திலீப் - சரஸ்வதி

  தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வான திலீப், சரஸ்வதிக்கும் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் வாழ்த்து

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வான திலீப், சரஸ்வதிக்கும் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
  சென்னை:

  மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்ட தேசிய நல்லாசிரியர் விருது பட்டியலில் தமிழகத்தை சேர்ந்த சென்னை அசோக்நகரில் உள்ள மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஆர்.சி.சரஸ்வதி, விழுப்புரம் மாவட்டம் சத்தியமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் எஸ்.திலீப் ஆகியோர் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு இருக்கின்றனர்.

  இந்நிலையில் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வான திலீப், சரஸ்வதிக்கும் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

  இது தொடர்பாக அவர் டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

  வளமான மாணவ சமுதாயத்தை உருவாக்கும் மகத்தான பணியாற்றி தேசிய நல்லாசிரியர் விருது- 2020க்கு தமிழகத்திலிருந்து தேர்வாகியுள்ள திரு.திலீப் (சத்தியமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளி) மற்றும் திருமதி.சரஸ்வதி (சென்னை அசோக்நகர் மகளிர் மேல்நிலைப்பள்ளி) ஆகியோருக்கு எனது உளம்நிறைந்த நல்வாழ்த்துகள் என பதிவிட்டுள்ளார்.
  Next Story
  ×