search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விநாயகர் சிலைகள்
    X
    விநாயகர் சிலைகள்

    விநாயகர் சதுர்த்தி விவகாரம்: நாளை விளக்கமளிக்க தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு

    விநாயகர் சதுர்த்தி விவகாரத்தில் தமிழக அரசு நாளை விளக்கமளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
    சென்னை:

    22-08-2020 அன்று விநாயகர் சதுர்த்து விழா நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. ஆனால், கொரோனா வைரஸ் காரணமாக விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்து செல்லவும், நீர் நிலைகளில் சிலைகளை கரைக்கவும் தமிழக அரசு தடை விதிக்கப்பட்டது.

    தடையை மீறி விநாயகர் சிலை வைப்பவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டது. இதையடுத்து பொதுமக்கள் அவரவர் வீடுகளிலேயே விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட இன்று தமிழக அரசு வலியுறுத்தியது. இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் சிலைகள் வைத்து வழிபடவும், ஊர்வலமாக எடுத்துச்சென்று சிலையை கரைக்க அனுமதி கோரி கணபதி என்பவர் வழக்கு தொடர்ந்தார்.

    இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், வழிபாட்டுக்கு பின் விநாயகர் சிலைகளை மக்கள் பெரிய கோவில் அருகில் வைக்க அனுமதி வழங்கலாமா..?, மக்கள் இருசக்கர வாகனத்தில் எடுத்துச்சென்று கடற்கரையில் சிலை வைக்க அனுமதி கொடுக்கப்படுமா..? ஆனால், கொரோனா சூழலில் மிகப்பெரிய ஊர்வலங்கள் அனுமதிக்க முடியாது என்பதில் மாற்றுக்கருத்தில்லை என நீதிபதிகள் கூறினர்.

    மேலும், கொரோனா விதிகளை பின்பற்றி ஐந்து அல்லது ஆறு நபர்கள் சிலையை கொண்டு செல்ல அனுமதி உள்ளதா..? மக்களின் உணர்வை கருத்தில் கொண்டு விநாயகர் சதுர்த்திக்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகளில் தளர்வு அறிவிக்க வாய்ப்புள்ளதா? என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. இது குறித்து நாளை காலை விளக்கமளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

    Next Story
    ×