search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெட்ரோல்
    X
    பெட்ரோல்

    48 நாட்களுக்கு பிறகு பெட்ரோல் விலை உயர்வு

    கடந்த 48 நாட்களாக விலை மாற்றமின்றி ஒரே விலையில் நீடித்த, பெட்ரோல் விலை இன்று 12 காசுகள் அதிரித்து, லிட்டருக்கு 83.75 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
    சென்னை:

    சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்துக்கொள்கின்றன. அந்த வகையில், பெட்ரோல், டீசல் விலை தினந்தோறும் நிர்ணயிக்கும் நடைமுறை எண்ணெய் நிறுவனங்களால் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

    நாடு முழுவதும், கொரோனா பரவலை தடுக்க, மார்ச் இறுதியில், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், மே வரை, பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாறுதலும் செய்யாமல் இருந்த பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், ஜூன் முதல் அவற்றின் விலையை உயர்த்தி வருகின்றன. சென்னையில் நேற்று பெட்ரோல் லிட்டர் 83.63 ரூபாய், டீசல் லிட்டர் 78.86 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது.

    இந்நிலையில், கடந்த 48 நாட்களாக விலை மாற்றமின்றி ஒரே விலையில் நீடித்த, பெட்ரோல் விலை இன்று 12 காசுகள் அதிகரித்து, லிட்டருக்கு 83.75 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. டீசல் 21வது நாளாக விலை மாற்றமின்றி 78.86 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்த விலை நிர்ணயம் வாகன ஓட்டிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    Next Story
    ×