search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா முன்கள பணியாளருக்கு முதலமைச்சர் பதக்கம் வழங்கினார்
    X
    கொரோனா முன்கள பணியாளருக்கு முதலமைச்சர் பதக்கம் வழங்கினார்

    விழுப்புரம், கரூர், கூத்தநல்லூர் சிறந்த நகராட்சிகளாக தேர்வு

    விழுப்புரம், கரூர், கூத்தநல்லூருக்கு சிறந்த நகராட்சிக்காக விருதை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.
    சென்னை:

    நாட்டின் 74-வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகிறது. தமிழக அரசின் சார்பில் சென்னை ஜார்ஜ் கோட்டையில் சுதந்திர தின விழா நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

    சென்னை ராஜாஜி சாலையில் வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஏற்றார். அதன்பின்னர் தலைமைச் செயலக கோட்டை கொத்தளத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேசியக்கொடியேற்றி வைத்து மரியாதை செலுத்தினார். சுதந்திர தின விழாவில் 4வது முறையாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி  தேசியக்கொடியேற்றி வைத்து உரையாற்றினார்.

    முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:

    சுதந்திர போராட்ட தியாகிகளின் ஓய்வூதியம் ரூ.16 ஆயிரத்திலிருந்து ரூ.17 ஆயிரமாக உயர்த்தப்படும்.  வீரர்களின் வாரிசுதாரர்களுக்கான குடும்ப ஓய்வூதியம், சிறப்பு ஊதியம் ரூ.8 ஆயிரத்திலிருந்து ரூ.8,500 ஆக உயர்த்தப்படும்.

    சென்னை மெரினாவில் ஜெயலலிதா நினைவிட பணிகள் முடிந்து விரைவில் திறக்கப்படும்.

    வந்தே பாரத் மற்றும் சமுத்திர சேது இயக்கத்தின் மூலம் 64,661 வெளிநாடுவாழ் தமிழர்கள் மீட்கப்பட்டுள்ளனர். 4.18 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் பத்திரமாக தமிழகத்திலிருந்து சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அதன்பின்னர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விருது வழங்கினார்.

    * கொரோனா முன்கள பணியாளர்கள் 27 பேருக்கு முதலமைச்சரின் பதக்கம் வழங்கப்பட்டது.

    * சிறந்த நகராட்சிக்காக விழுப்புரம் மாவட்டத்திற்கு முதல் பரிசு, கரூர் மாவட்டத்திற்கு இரண்டாம் பரிசு, கூத்தநல்லூருக்கு 3ம் பரிசு வழங்கப்பட்டது.

    * சிறந்த பேரூராட்சிக்காக முதல் பரிசு - சேலம் வனவாசி,  2ம் பரிசு - தேனி வீரபாண்டி, 3ம் பரிசு - கோவை மதுக்கரைக்கு வழங்கப்பட்டது.

    * மதுரை அருண்குமார், கடலூர் ராம்குமார், சென்னை அம்பேத்கருக்கு மாநில இளைஞர் விருது தரப்பட்டது.

    * பெண்கள் பிரிவில் முதல்வரின் மாநில இளைஞருக்கான விருது கடலூரை சேர்ந்த புவனேஸ்வரிக்கு தரப்பட்டது.

    * சுகாதாரத்துறையில் 9, காவல்துறையில் 3, தீயணைப்பு துறையில் 3 பேருக்கு சிறப்பு பதக்கம் வழங்கப்பட்டது.

    * நகராட்சி நிர்வாக துறையில் 6, வருவாய் துறையில் 3, கூட்டுறவு துறையில் 2 பேருக்கு சிறப்பு பதக்கம் வழங்கப்பட்டது.

    * முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் இருந்து நல் ஆளுமைக்கான விருதை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பெற்றார்.

    * மனித வளம், ஓய்வூதிய மேலாண்மையை ஒருங்கிணைத்து கணினி மையமாக்கிய கருவூல கணக்குத்துறைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விருது வழங்கினார்.

    Next Story
    ×