search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மருத்துவர் சௌமியா சுவாமிநாதனுக்கு முதலமைச்சர் விருது வழங்கினார்
    X
    மருத்துவர் சௌமியா சுவாமிநாதனுக்கு முதலமைச்சர் விருது வழங்கினார்

    கொரோனா தடுப்பு பணியில் சிறப்பாக செயல்பட்ட மருத்துவர் சௌமியா சுவாமிநாதனுக்கு விருது

    கொரோனா தடுப்பு பணியில் சிறப்பாக செயல்பட்டதற்காக உலக சுகாதார நிறுவனத்தின் முதன்மை ஆராய்ச்சியாளர் மருத்துவர் சௌமியா சுவாமிநாதனுக்கு முதலமைச்சர் விருது வழங்கினார்.
    சென்னை:

    நாட்டின் 74-வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகிறது. தமிழக அரசின் சார்பில் சென்னை ஜார்ஜ் கோட்டையில் சுதந்திர தின விழா நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வரும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை காரின் முன்னாலும், பின்னாலும் சென்னை காவல்துறையினரின் மோட்டார் சைக்கிள்கள் புடைசூழ அழைத்து வந்தனர்.

    சென்னை ராஜாஜி சாலையில் வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஏற்றார். அதன்பின்னர் தலைமைச் செயலக கோட்டை கொத்தளத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேசியக்கொடியேற்றி வைத்து மரியாதை செலுத்தினார். சுதந்திர தின விழாவில் 4வது முறையாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி  தேசியக்கொடியேற்றி வைத்து உரையாற்றினார்.

    சுதந்திர தின விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விருது வழங்கினார்.

    * கொரோனா நோய் தொற்றின் சங்கிலியை உடைத்த சென்னை மாநகராட்சிக்கு நல் ஆளுமை விருது

    * புதுமையான உத்தியை கையாண்டு நுண்ணீர் பாசனத்தில் சிறந்து விளங்கும் வேளாண் துறைக்கு நல் ஆளுமை விருது

    * கொரோனா காலத்தில் தடையின்றி மருந்து கிடைக்க செய்த மருத்துவ சேவை கழகத்திற்கு நல் ஆளுமை விருது

    * ஆனந்தம் இளைஞர் அறக்கட்டளை நிறுவனர் க.செல்வகுமாருக்கு அப்துல் கலாம் விருது தரப்பட்டது

    துணிவு மற்றும் சாகச செயலுக்கான தமிழக அரசின் கல்பனா சாவ்லா விருது 3 பெண்களுக்கு வழங்கப்பட்டது.

    * பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த செந்தமிழ்ச்செல்வி, முத்தம்மாள், ஆனந்தவள்ளிக்கு கல்பனா சாவ்லா விருது

    * கொரோனா தடுப்பு பணியில் சிறப்பாக செயல்பட்டதற்காக உலக சுகாதார நிறுவனத்தின் முதன்மை ஆராய்ச்சியாளர் மருத்துவர் சௌமியா சுவாமிநாதனுக்கு விருது

    மாற்று திறனாளிகள் நலனுக்காக மிகச்சிறந்த சேவை புரிந்த 5 பேருக்கு முதல்வரின் சிறப்பு விருது

    * சென்னையை சேர்ந்த சி.எஸ்.ஐ. காதுகேளாதோர் பள்ளிக்கு தொண்டு நிறுவனத்திற்காக விருது

    * சிறந்த சமூக பணியாளர் திருச்சி சாந்தகுமார், சிறந்த மருத்துவராக சேலம் சியாமளாவுக்கு விருது

    * அதிக மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு தந்த சக்தி மசாலாவிற்கு சிறப்பு நிறுவனத்திற்கான விருது

    * சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக்கு சிறந்த மாவட்ட கூட்டுறவு வங்கி விருது வழங்கப்பட்டது

    * கோவை கோதணவள்ளிக்கு மகளிர் நலனில் சிறந்த தொண்டாற்றிய சிறந்த சமூக பணியாளர் விருது

    * கடலூர் கிரீடு நடனசபாபதிக்கு மகளிர் நலனில் சிறந்த தொண்டாற்றிய சிறந்த தொண்டு நிறுவன விருது

    * உள்ளாட்சி அமைப்புகளில் சிறந்த மாநகராட்சி விருது வேலூர் மாநகராட்சிக்கு வழங்கப்பட்டது.

    Next Story
    ×