search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா விழிப்புணர்வு எல்இடி வாகன சேவையை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்
    X
    கொரோனா விழிப்புணர்வு எல்இடி வாகன சேவையை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்

    கொரோனா விழிப்புணர்வு எல்இடி வாகன சேவையை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்

    கொரோனா பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த எல்இடி வீடியோ வாகனங்களின் சேவைகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.
    சென்னை:

    சென்னை தலைமைச் செயலகத்தில் கொரோனா பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த எல்இடி வீடியோ வாகனங்களின் சேவை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

    வீடியோ மூலம் கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் 7 வாகனங்களை தொடங்கி வைத்தார். மண்டலத்திற்கு தலா 2 வாகனம் என 15 மண்டலங்களுக்கு 30 எல்இடி வீடியோ வாகனங்களின் சேவை தொடங்கப்பட்டுள்ளது.

    சென்னையில் 10 லட்சம் இல்லங்களுக்கு கொரோனா, டெங்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கும் பணியை தொடங்கி வைத்தார். கொரோனாவில் இருந்து குணமடைந்த 1 லட்சம் பேருக்கு செல்போனில் முதலமைச்சர் வாழ்த்து கூறும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

    மேலும் நேப்பியர், ராதாகிருஷ்ணன் மேம்பாலத்தில் அமைக்கப்பட்டுள்ள மாறும் வண்ண விளக்குகளை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.

    Next Story
    ×