search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சமூக இடைவெளி விட்டு நின்று விழிப்புணர்வு ஏற்படுத்திய மாணவர்கள்
    X
    சமூக இடைவெளி விட்டு நின்று விழிப்புணர்வு ஏற்படுத்திய மாணவர்கள்

    உலக யானைகள் தினம் - சமூக இடைவெளி விட்டு நின்று விழிப்புணர்வு ஏற்படுத்திய மாணவர்கள்

    கோவில்பட்டி சிந்தாமணி நகரில் உலக யானைகள் தினத்தை முன்னிட்டு சமூக இடைவெளி விட்டு நின்று மாணவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
    கோவில்பட்டி:

    கோவில்பட்டி சிந்தாமணி நகரில் உலக யானைகள் தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி அப்பகுதியில் உள்ள மாணவர்கள் யானையை போன்ற முக கவசம் அணிந்து, தங்களது வீடுகளின் முன்பு சமூக இடைவெளி விட்டு நின்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    மேலும் யானைகளுக்கு எதிரான செயல்களை தடுத்து நிறுத்த வேண்டும், கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பொது இடங்களில் அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என்று வலியுறுத்தி உறுதிமொழி ஏற்றனர். பாரதியார் நினைவு அறக்கட்டளை தலைவர் முத்து முருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×