search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    வேப்பூர் செக்கடி பகுதியில் சாராயம் விற்ற 3 பெண்கள் கைது

    வேப்பூர் செக்கடி பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சாராயம் விற்ற 3 பெண்களை போலீசார் கைது செய்தனர். 600 லிட்டர் ஊறலை கண்டுபிடித்து அழித்தனர்.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எஸ்.அரவிந்த் உத்தரவின்பேரில் தலைமையிட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு டி.அசோக்குமார் மேற்பார்வையில் திருவண்ணாமலை மதுவிலக்கு துணை போலீஸ் சூப்பிரண்டு எம்.பழனி தலைமையில் திருவண்ணாமலை மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் கே.சரஸ்வதி மற்றும் போலீசார் வேப்பூர்செக்கடி காட்டுப்பகுதியில் மதுவிலக்கு வேட்டை நடத்தினர். அப்போது 600 லிட்டர் சாராய ஊறலை போலீசார் கண்டுபிடித்து அழித்தனர்.

    மேலும் சமுத்திரம் பகுதியில் சாராய விற்பனையில் ஈடுபட்டதாக செல்வி, வனிதா, சகுந்தலா ஆகிய 3 பெண்களை போலீசார் கைது செய்தனர்.
    Next Story
    ×