search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சுதந்திர தினத்தையொட்டி தஞ்சை ரெயில் நிலையத்தில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்ததை படத்தில் காணலாம்
    X
    சுதந்திர தினத்தையொட்டி தஞ்சை ரெயில் நிலையத்தில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்ததை படத்தில் காணலாம்

    சுதந்திரதினத்தை முன்னிட்டு தஞ்சை ரெயில்நிலையத்தில் போலீஸ் பாதுகாப்பு

    சுதந்திரதினத்தை முன்னிட்டு தஞ்சை ரெயில் நிலையத்தில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
    தஞ்சாவூர்:

    நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து பஸ், ரெயில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் 15-ந்தேதி நாடு முழுவதும் சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது.

    சுதந்திர தின விழாவை கொண்டாட தமிழக அரசு பல்வேறு வழிகாட்டுதல்களை வெளியிட்டு, அதனை பின்பற்ற வேண்டும் என்று கூறியுள்ளது. இதைத்தொடர்ந்து சுதந்திர தின விழாவில் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க தஞ்சை ரெயில்நிலையம் முன்பு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஊரடங்கு உள்ள நிலையில் ஆள்நடமாட்டம் இல்லாத சந்தர்ப்பதை பயன்படுத்தி யாரேனும் உள்ளே நுழைந்து விடாமல் இருக்க நுழைவு வாயிலில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் ரெயில் நிலைய பிளாட்பாரங்களிலும் ரெயில்வே பாதுகாப்புப்படையினரும், ரெயில்வே போலீசாரும் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த சோதனை சுதந்திரதினம் வரையில் தொடர்ந்து செயல்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.
    Next Story
    ×