என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கடன் தொல்லையால் தொழில் அதிபர் தற்கொலை
Byமாலை மலர்13 Aug 2020 1:22 PM GMT (Updated: 13 Aug 2020 1:22 PM GMT)
திண்டுக்கல் அருகே கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்த தொழில் அதிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வேடசந்தூர்:
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் வெங்கடாசலம் செட்டியார் தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. அவருடைய மகன் கங்காதரன் (வயது 38). தொழில் அதிபர். இவர், தனது மனைவி இலக்கியா மற்றும் குழந்தையுடன் திருப்பூரில் தங்கியிருந்து ரெடிமேடு துணிகளை தைத்து விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தார். இதற்காக அவர், சிலரிடம் கடன் வாங்கி இருந்தார். கொரோனா ஊரடங்கு காரணமாக அவரால் தொழில் செய்ய முடியவில்லை. மேலும் கடன் கொடுத்தவர்கள், கங்காதரனிடம் பணம் கேட்டு தொல்லை கொடுத்தனர். இதனால் அவர் மனம் உடைந்து காணப்பட்டார்.
இந்தநிலையில் திருப்பூரில் இருந்து கங்காதரன் மட்டும் சொந்த ஊரான வேடசந்தூருக்கு நேற்று வந்தார். பின்னர் தனது வீட்டின் மாடி அறையில் உள்ள மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து வேடசந்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் கவிதா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பின்னர் கங்காதரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×