என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சுதந்திர தினத்தை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 23 பேர் கைது
Byமாலை மலர்13 Aug 2020 12:24 PM GMT (Updated: 13 Aug 2020 12:24 PM GMT)
சுதந்திர தினத்தை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருவாரூர் மாவட்டத்தில் 23 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருவாரூர்:
சுதந்திர தினம் நாடு முழுவதும் வருகிற 15-ந்தேதி கொண்டாடப்படுகிறது. விழாவை அசம்பாவிதம் ஏதுமின்றி பாதுகாப்புடன் கொண்டாட வேண்டும் என்பதற்காக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் போலீசார் கடந்த ஒரு வாரகாலமாக தீவிர பாதுகாப்பு மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் சுதந்திர தினத்தை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்டம் முழுவதும் பல்வேறு குற்றவியல் நடவடிக்கைகளில் ஈடுபட்ட 23 பேரின் பட்டியல் கண்டறிப்பட்டு, அவர்களை கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு துரை உத்தரவிட்டார். அதன்படி 23 பேரையும் அந்தந்த பகுதி போலீசார் கைது செய்தனர். மேலும் மாவட்டம் முழுவதும் 240 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
திருவாரூர் மாவட்டம் முழுவதும் 11 இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு சுழற்சி முறையில் 12 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். மாவட்டத்தின் கடலோர எல்லையான முத்துப்பேட்டை பகுதியில் 24 மணி நேரமும் கடலோர போலீஸ் படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். எந்தவித அசம்பாவித சம்பவம் இன்றி அமைதியான முறையில் சுதந்திர தின விழாவை கொண்டாட அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது என்று போலீஸ் சூப்பிரண்டு துரை தெரிவித்தார்.
Next Story
×