search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எஸ்வி சேகர்
    X
    எஸ்வி சேகர்

    எஸ்.வி.சேகர் மீது போலீசார் வழக்குப் பதிவு

    நடிகரும், பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவருமான எஸ்.வி.சேகர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
    சென்னை:

    தமிழக முதலமைச்சரின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பேசியும், தேசியக் கொடியை அவமதித்தும் சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்ட எஸ்.வி.சேகர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ராஜரத்தினம் என்பவர் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

    எஸ்.வி. சேகர் அதிமுக கொடி குறித்து பேசி சமூக வலைதளத்தில் வெளியிட்ட வீடியோ சர்ச்சைக்குள்ளானது. இதற்கு அமைச்சர்கள் தொடங்கி முதலமைச்சர் வரை கண்டனம் தெரிவித்த நிலையில், அவர் மீது இந்த முறை, நடவடிக்கை எடுக்கவுள்ளதாக, தகவல் வெளியாகி இருந்தது.

    இந்த நிலையில் எஸ்.வி சேகர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தேசிய கொடியை மத அடையாளங்களுடன் ஒப்பிட்டு பேசியதாக 2 பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
    Next Story
    ×