என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம்- குமரகுரு எம்.எல்.ஏ. வழங்கினார்
Byமாலை மலர்13 Aug 2020 10:11 AM GMT (Updated: 13 Aug 2020 10:11 AM GMT)
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரண உதவிகளை குமரகுரு எம்.எல்.ஏ. வழங்கினார்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினருமான குமரகுரு எம்.எல்.ஏ. கள்ளக்குறிச்சி மாவட்ட அ.தி.மு.க. சார்பில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஏழை, எளிய குடும்பங்களுக்கு ஒரு மாதத்துக்ககான மளிகை பொருட்கள், அரிசி, காய்கறிகள் வழங்கப்படுவதாக அறிவித்திருந்தார். அதன்படி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர்களுக்கு அரிசி, மளிகை பொருட்கள், காய்கறிகள் ஆகியவற்றை வழங்கி வருகிறார்.
இந்த நிலையில் கள்ளக்குறிச்சி, தியாகதுருகம், சின்னசேலம் ஆகிய பகுதிகளில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சி கள்ளக்குறிச்சியில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் குமரகுரு எம்.எல்.ஏ. கலந்துகொண்டு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஒருமாதத்திற்கு தேவையான 25 கிலோ அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய் மற்றும் மளிகை பொருட்கள், காய்கறிகள் ஆகியவற்றை வழங்கினார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும்போது, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 430 குடும்பத்தினருக்கு ஒரு மாதத்துக்கு தேவையான அரிசி, மளிகை, காய்கறி உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஏழை எளிய மக்கள் 8189892380 என்ற செல்போனுக்கு தகவல் தெரிவித்து பயன்பெறலாம் என்றார்.
இந்த நிகழ்ச்சியில் கள்ளக்குறிச்சி அ.தி.மு.க. நகர செயலாளர் பாபு, ஒன்றிய செயலாளர்கள் அய்யப்பா, அய்யம்பெருமாள், ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் ஞானவேல், வக்கீல் பிரிவு மாவட்ட செயலாளர் சீனிவாசன், அமைப்பு சாரா ஓட்டுநர் அணி மாவட்ட செயலாளர் செந்தில்குமார், அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் அய்யாக்கண்ணு, வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க இயக்குநர் சேகர் மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Next Story
×