search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கேபி முனுசாமி
    X
    கேபி முனுசாமி

    முதல்வர் வேட்பாளர் யார்? உரிய நேரத்தில் முடிவு- கே.பி.முனுசாமி

    அதிமுக முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து உரிய நேரத்தில் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று கே.பி.முனுசாமி கூறினார்.
    சென்னை:

    சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் ஆலோசனைக்கு பின் கே.பி.முனுசாமி பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    சட்டசபை தேர்தலை எதிர்கொள்வது குறித்து தற்போது ஆலோசனை நடத்தினோம். அதிமுக முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து உரிய நேரத்தில் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும். தலைமைக்கழகம் முறையாக ஆலோசித்து உரிய நேரத்தில் முதல்வர் வேட்பாளரை அறிவிக்கும்.

    பாராளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில்தான் பாஜக தேர்தலை சந்தித்தது. அதிமுக கூட்டணியில் பாஜக தொடர்வதாக அதன் தலைவர் முருகனே கூறிவிட்டார். ஆதாயம் கிடைப்பதற்காக பாஜகவுக்கு சென்ற துரைசாமி கூறியதற்கு எல்லாம் பதில் சொல்ல அவசியமில்லை.

    சட்டசபை தேர்தலுக்கான அதிமுகவின் பணிகள் ஏற்கனவே தொடங்கி விட்டன. முதல்வர் வேட்பாளர் விவகாரத்தை அதிமுக நிர்வாகிகள் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×