என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மரவள்ளிக்கிழங்கிற்கு விலை நிர்ணயம் செய்ய அரசுக்கு, விவசாயிகள் கோரிக்கை
Byமாலை மலர்13 Aug 2020 7:14 AM GMT (Updated: 13 Aug 2020 7:14 AM GMT)
மரவள்ளிக்கிழங்கிற்கு அரசு விலை நிர்ணயம் செய்ய விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நொய்யல்:
கரூர் மாவட்டத்தில் நொய்யல், வேட்டமங்கலம், நடையனூர், ஒரம்புபாளையம், ஓலப்பாளையம், நல்லிக்கோவில், கவுண்டன்புதூர், குளத்துப்பாளையம், புன்னம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் விவசாயிகள் மரவள்ளிக்கிழங்கு பயிரிட்டுள்ளனர். இப்பகுதிகளில் விளையும் மரவள்ளிக்கிழங்குகளை புதன் சந்தை, புதுச்சத்திரம், செல்லப்பம்பட்டி, மின்னாம்பள்ளி, கீரனூர், நாமகிரிபேட்டை, தொ.ஜேடர்பாளையம், ஆத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் செயல்பட்டு வரும் சவ்வரிசி தயார் செய்யும் கிழங்கு மாவு மில்களுக்கு, புரோக்கர்கள் டன் கணக்கில் வாங்கி லாரிகள் மூலம் அனுப்பி வைக்கின்றனர். அதேபோல் வியாபாரிகள் வாங்கி ஊருக்குள் கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர்.
மரவள்ளிக்கிழங்கு மூலம் பல்வேறு உணவு பொருட்கள் தயார் செய்யப்படுகிறது. அதேபோல் நூல் மற்றும் புதிய துணிகளுக்கு போடுவதற்கு பசை மாவும் தயார் செய்யப்படுகிறது. மரவள்ளிக்கிழங்கில் இருந்து சிப்ஸ் தயார் செய்து மொத்தமாகவும், பாக்கெட்கள் மூலம் சில்லரை விற்பனையும் செய்யப்பட்டு வருகிறது. மரவள்ளிக் கிழங்குகளை உள்ள சத்தை கொண்டு (டார்ச் சத்து) பாய்ண்ட் அடிப்படையில் வாங்குகின்றனர். கிழங்குகளில் எத்தனை பாய்ண்ட் டார்ச் சத்து இருக்கிறதோ, அதற்கு தகுந்தாற்போல் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அதேபோல் சவ்வரிசி விலை உயரும்போது மரவள்ளிக் கிழங்குக்கு விலை உயர்த்தியும், வீழ்ச்சி அடையும் போது விலை குறைத்தும் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.
மரவள்ளிக்கிழங்கில் இருந்து தயார் செய்யப்படும் சவ்வரிசி, கிழங்கு மாவு போன்றவை தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களுக்கும், கர்நாடகா, ஆந்திரா, கேரளா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும் மொத்த வியாபாரிகளுக்கு அனுப்பப்பட்டு வந்தது. இந்நிலையில் கொரோனா ஊரடங்கால் கடந்த மார்ச் மாதம் முதல் வெளிமாநிலங்களுக்கும், தமிழ்நாட்டில் உள்ள மற்ற மாவட்டங்களுக்கும் அனுப்ப முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அவற்றை அதிகளவு உற்பத்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் டன் ஒன்றுக்கு ரூ.10 ஆயிரத்துக்கு மேல் விற்பனை ஆன மரவள்ளிக்கிழங்கு, தற்போது ரூ.6,500-க்கு மட்டுமே விற்பனை ஆகிறது.
தற்போது நொய்யல் உள்ளிட்ட பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்ட மரவள்ளிக்கிழங்கை விவசாயிகள் அறுவடை செய்து வருகின்றனர். எனவே மரவள்ளிக்கிழங்கு விலை உயர, பல்வேறு மாநிலங்களுக்கும், பல்வேறு மாவட்டங்களுக்கும் சவ்வரிசி மற்றும் கிழங்கு மாவு மூட்டைகளை அனுப்ப தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் மரவள்ளிக்கிழங்கிற்கு அரசு விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று மரவள்ளிக்கிழங்கு பயிரிட்டுள்ள விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story
×