search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தலைமைச் செயலகம்
    X
    தலைமைச் செயலகம்

    பள்ளி, கல்லூரி மாணவர்கள், மூத்த குடிமக்கள் சுதந்திர தின நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டாம்- தமிழக அரசு

    பள்ளி, கல்லூரி மாணவர்கள், மூத்த குடிமக்கள் சுதந்திர தின நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டாம் என்று தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது.
    சென்னை:

    தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

    * தலைமை செயலக கோட்டை கொத்தளத்தில் 15ந்தேதி காலை 8.45க்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேசியக்கொடி ஏற்றுகிறார்.

    * வீடுகளுக்கே சென்று தியாகிகளுக்கு பொன்னாடை போர்த்தி ஆட்சியர் மரியாதை செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    * விடுதிகளுக்கு நேரில் சென்று மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு இனிப்பு பெட்டகம் தர முதலமைச்சர் ஆணை பிறப்பித்துள்ளார்.

    * கொரோனா பணியில் ஈடுபட்ட முன்களப்பணியாளர்களுக்கு பதக்கம், சான்றிதழ் வழங்கி முதலமைச்சர் சிறப்பிக்கிறார்.

    * சுதந்திர தின நிகழ்ச்சிகளை டிவி, வானொலியில் நேரடியாக ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    * சுதந்திர தின விழாவை காண பொதுமக்கள், மாணவர்கள், பள்ளிக்குழந்தைகள் நேரில் வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×