search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கும்பகோணம் அருகே மூப்பகோவில் பகுதியில் உள்ள நெல் கொள்முதல் நிலையத்தை படத்தில் காணலாம்.
    X
    கும்பகோணம் அருகே மூப்பகோவில் பகுதியில் உள்ள நெல் கொள்முதல் நிலையத்தை படத்தில் காணலாம்.

    கொள்முதல் நிலையத்தில் மழையில் வீணாகும் நெல் மூட்டைகள் - விவசாயிகள் வேதனை

    கும்பகோணம் அருகே மூப்பக்கோவில் பகுதியில் உள்ள கொள்முதல் நிலையத்தில் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகி வருகின்றன.
    கும்பகோணம்:

    தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள மூப்பக்கோவில், ஏராகரம், இன்னம்பூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் 2,000 ஏக்கர் பரப்பரளவில் நெல் சாகுபடி செய்யப்படுவது வழக்கம். இந்த பகுதியில் விளையும் நெல்லை, விவசாயிகள் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்து வருகிறார்கள்.

    விவசாயிகளின் தேவைக் காக மூப்பக்கோவில் பகுதியில் தற்காலிக கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டு ஒரு மாதமாக செயல்பட்டு வருகிறது. இங்கு இதுவரை 200 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் தார்ப்பாய் கொண்டு முறையாக மூடி வைக்கப்பட்டு இருந்தாலும், கொள்முதல் நிலையம் அமைந்துள்ள இடம் மிகவும் தாழ்வான பகுதி என்பதால் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகி வருகிறது.

    கடந்த சில நாட்களாக கும்பகோணம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அவ்வப்போது பலத்த மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் மூப்பக்கோவிலில் தாழ்வான பகுதியில் இயங்கி வரும் கொள்முதல் நிலையத்தில் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து முளைத்த நிலையில் காட்சி அளிக்கிறது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். இந்த கொள்முதல் நிலையத்தில் இருந்து நெல் மூட்டைகளை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் நெல்லுக்குரிய தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்றும் விவசாயிகள் எதிர்பார்க்கிறார்கள்.

    Next Story
    ×