search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அபராதம்
    X
    அபராதம்

    கடைகளில் அபராதம் வசூலிப்பதால் வியாபாரிகள் வேதனை

    திருவண்ணாமலை மாவட்டத்தில் சமூக இடைவெளியை பொதுமக்கள் பின்பற்றாத நிலையில் அது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தாத அதிகாரிகள் கடைகளுக்கு அபராதம் விதிப்பதால் வியாபாரிகள் வேதனை அடைந்துள்ளனர்.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரசின் தாக்கம் அதிகாரித்து கொண்டே வருகிறது. இதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் மூலம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் மத்திய, மாநில அரசு மூலம் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பல்வேறு தளர்வுகளுடன் தொடர்ந்து அமலில் உள்ளது. இது மட்டுமின்றி வீட்டில் இருந்து வெளியே வரும் பொதுமக்கள் முகக் கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்றும் அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றது.

    ஆனால் திருவண்ணாமலை நகராட்சி பகுதிகளில் மக்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகாரித்த வண்ணம் உள்ளது. மக்களுக்கும் கொரோனா தொற்று கண்டு எந்த வித அச்சமும் இல்லை. திருவண்ணாமலை நகராட்சி பகுதியில் தினமும் காலை முதல் மாலை சுமார் 6 மணி வரை அனைத்து கடைகளும் திறந்து இருக்கின்றன. கடை வீதிகளில் மக்கள் சமூக இடைவெளியை பற்றி கவலைப்படாமல் இருப்பதால் கொரோனா தொற்று மேலும் அதிகாரிக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

    திருவண்ணாமலை நகராட்சி பகுதியில் நேற்று முன்தினம் வரை 883 பேர் வியாபாரிகள் தரப்பில் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் 727 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். மீதமுள்ள 134 பேர் தொடந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். அதுமட்டுமின்றி 22 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.

    ஆரம்ப கட்டத்தில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் நகராட்சி நிர்வாகம் மூலம் அடிக்கடி கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட்டது. ஆனால் தற்போது சரிவர கிருமிநாசினி மருந்து தெளிப்பது இல்லை என்று குற்றச்சாட்டு எழுந்து உள்ளது.

    ஊரடங்கு தொடர்ந்து அமலில் உள்ளதால் பொதுமக்கள் தேவையின்றி வெளியே வரவேண்டாம் என்றும், சமூக இடைவெளியே பின்பற்ற வேண்டும் என்றும் அதிகாரிகள் அறிவுறுத்தாமல் கடை வீதிகளில் உள்ள கடைகளுக்கு அதிகாரிகள் சென்று இங்கு சமூக இடைவெளி பின்பற்றவில்லை, முகக் கவசம் அணியவில்லை என்று அபராதம் வசூல் செய்து வருவதாகவும் குற்றம் சாட்டப்பட்டு வருகின்றது. இதனால் வேதனை அடைந்த வியாபாரிகள் கொரொனா தொற்று பரவலை கட்டுப்படுத்த பொதுமக்களிடையே போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர்.
    Next Story
    ×