search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முக ஸ்டாலின்
    X
    முக ஸ்டாலின்

    பெண்களுக்கு சொத்தில் சம உரிமை உண்டு என்ற தீர்ப்பு வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு- மு.க.ஸ்டாலின்

    பெண்களுக்கு சொத்தில் சம உரிமை உண்டு என்ற தீர்ப்பு வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பாகும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    ‘‘திருத்தப்பட்ட இந்து வாரிசு சட்டத்தின்படி மகனை போன்று மகளும் சொத்தின் சம பங்கை பெறும் உரிமை உள்ளது. சட்டம் நடைமுறைக்கு வருவதற்கு முன்னதாக சொத்துதாரர் இறந்திருந்தாலும் பெண்ணுக்கு சம பங்கு பெறும் உரிமை உள்ளது’’ என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியிருப்பதாவது:

    பெண்களுக்கு சொத்தில் சம உரிமை உண்டு என்ற தீர்ப்பு வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பாகும். சொத்தில் பெண்களுக்கு சமஉரிமை என்ற சட்டத்தை 1989-லேயே கருணாநிதி கொண்டு வந்தார்.

    நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை திமுகவின் கொள்கைக்கு கிடைத்த மாபெரும் வெற்றியாக கருதுகிறேன். அனைத்து தளங்களிலும் பெண்ணினம் சம உரிமை பெற்று தலை நிமிர தீர்ப்பு அடித்தளம் அமைக்கும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.


    Next Story
    ×