search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னை ஐகோர்ட்டு
    X
    சென்னை ஐகோர்ட்டு

    போலி இ-பாசை தடுக்க நடவடிக்கை- அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு

    கொரோனா ஊரடங்கினால் மாவட்டத்தை விட்டு மாவட்டம் செல்ல இ-பாஸ் அவசியம். எனவே பொதுமக்கள் நலன் கருதி போலி இ- பாசை தடுக்க தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
    சென்னை:

    கொரோனா ஊரடங்கினால் மாவட்டத்தை விட்டு மாவட்டம் செல்ல இ-பாஸ் அவசியமாக உள்ளது. ஆனால், அவசர தேவைக்காக இ-பாஸ் கேட்டு விண்ணப்பம் செய்யும் மக்களுக்கு கிடைப்பது இல்லை. இடைத்தரகர்கள் மூலம் விண்ணப்பித்தால் மட்டுமே கிடைக்கிறது என்ற குற்றச்சாட்டு தமிழகத்தில் எழுந்தது.

    கடந்த வாரம் குழந்தை தொழிலாளர்களை திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து அவிநாசிக்கு இ-பாஸ் எதுவும் இல்லாமல் அழைத்து சென்றது ஐகோர்ட்டு நீதிபதிகள் என்.கிருபாகரன், வி.எம்.வேலுமணி ஆகியோர் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், “இப்படிப்பட்ட மோசமான சூழ்நிலைகளிலும் கூட லஞ்சம் வாங்கும் அரசு அதிகாரிகளை, ரத்த தாகம் பிடித்து அலையும் ஓநாய்கள்” என்று கடுமையாக விமர்சனம் செய்தனர்.

    இந்த நிலையில், இ-பாஸ் தொடர்பான ஒரு வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.ஹேமலதா ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான சிறப்பு பிளடர், இ-பாஸ் வழங்கும் முறையில் உள்ள சிக்கல்களை களைய ஒரு கமிட்டியை அரசு உருவாக்கியுள்ளதாக கூறினார். இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், “இந்த கமிட்டி போலி இ-பாஸ், இ-பாசை தவறாக பயன்படுத்தும் செயல் உள்ளிட்ட விவகாரத்தையும் ஆராய்ந்து அதை தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்று உத்தரவிட்டனர்.
    Next Story
    ×