search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ்
    X
    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ்

    கலெக்டருக்கு கார் ஓட்ட ஆசைப்படும் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ்

    கலெக்டருக்கு கார் ஓட்டுவதை விட வேறு மகிழ்ச்சியான விஷயம் வேறு என்ன இருக்க முடியும் எனக்கு என பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் டுவிட்டரில் கூறியிருக்கிறார்.
    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-

    ஐ.ஏ.எஸ். அதிகாரியாக உள்ள கடலூர் மாவட்டம் மருங்கூர் கிராமத்தைச் சேர்ந்த ராமநாதனின் மகள் ஐஸ்வர்யாவுக்கு தொலைபேசியில் வாழ்த்துக் கூறியபோது ஒரு இனிமையான மலரும் நினைவுகள்.... மருங்கூர் ராமநாதனின் மகன் ராம்பிரசாத் என் மீதும், டாக்டர் அன்புமணி ராமதாஸ் மீதும், பா.ம.க. மீதும் பற்று கொண்டவர். ஒருமுறை நான் சென்னையில் காரில் சென்று கொண்டிருந்த போது, ஒரு சிக்னலில் பச்சை விளக்குக்காக காத்திருந்தேன். அப்போது அந்த வழியாக காரில் சென்று கொண்டிருந்த ராம்பிரசாத், காரை நிறுத்தி விட்டு, எனது காரை நோக்கி ஓடி வந்தார். அதற்குள் சிக்னலில் இருந்து புறப்பட்டு விட்டேன். ஒரு இளைஞர் ஓடி வருவதை பார்த்த நான் காரை நிறுத்தும்படி கூறினேன்.

    அந்த இளைஞனை அழைத்து விசாரித்த போது தான், அவர் மருங்கூர் ராமநாதனின் மகன் என்பது தெரியவந்தது. என்ன செய்து கொண்டிருக்கிறாய்? என்று கேட்ட போது, ஐ.ஏ.எஸ். படித்துக் கொண்டிருப்பதாகவும், கலெக்டர் ஆக வேண்டும் என்பது தான் லட்சியம் என்றும் கூறினார். அதற்காக ராம் பிரசாத்தை ஊக்கப்படுத்திய நான், “நீ கலெக்டர் ஆனால், நான் உனக்கு டிரைவராக வந்து கார் ஓட்டுகிறேன்” என்று கூறினேன். அதைக் கேட்டு அந்த இளைஞர் மகிழ்ச்சி அடைந்தார். என்னுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

    ராம்பிரசாத் கலெக்டர் ஆனவுடன் ஏற்கனவே உறுதி அளித்தவாறு அவருக்கு ஒரு நாள் கார் ஓட்ட ஆசையுடன் இருக்கிறேன்; காத்திருக்கிறேன். கழனியில் உழைத்த பாட்டாளி சொந்தங்கள் கலெக்டர் ஆகும் போது, அவர்களுக்கு கார் ஓட்டுவதை விட வேறு மகிழ்ச்சியான விஷயம் வேறு என்ன இருக்க முடியும் எனக்கு?. சின்ன சின்ன ஆசை... கலெக்டருக்கு கார் ஓட்ட ஆசை...

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். 
    Next Story
    ×