search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கார்ட்டூன் ஓவியம்
    X
    கார்ட்டூன் ஓவியம்

    திருப்பூரில் 51 பிரபலங்களின் ஓவியங்களை வரைந்த மாணவர்கள்

    திருப்பூரில் பல்வேறு துறைகளில் பிரசித்தி பெற்ற 51 பேரின் உருவங்களை வண்ணக்கலவைகளை கொண்டு கார்ட்டூன் ஓவியமாக மாணவர்கள் தீட்டி உள்ளனர்.
    திருப்பூர்:

    திருப்பூர் முதலிபாளையம் நிப்ட்-டீ கல்லூரி முதலாமாண்டு காஸ்ட்யூம் டிசைன் அண்டு பேஷன் படிக்கும் மாணவர் சஞ்சய்குமார், அப்பேரல் பேஷன் டிசைன் மாணவர் வசந்த் குமார் ஆகிய 2 பேரும் இணைந்து கல்லூரி சுவற்றில் அனைவரையும் கவர்ந்திழுக்கும் வகையில் வண்ண ஓவியங்கள் தீட்டி அசத்தியுள்ளனர். எம்.எஸ்.சுப்புலட்சுமி, நடிகர் சிவாஜிகணேசன், எம்.ஜி.ஆர், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், இயக்குனர் சங்கர் உட்பட இந்திய அளவிலும், வால்ட் டிஸ்னி, மைக்கேல் ஜாக்சன் என சர்வதேச அளவில் பல்வேறு துறைகளில் பிரசித்தி பெற்ற 51 பேரின் உருவங்களை பளிச்சிடும் வண்ணக்கலவைகளை கொண்டு கார்ட்டூன் ஓவியமாக தீட்டி உள்ளனர்.

    கார்ட்டூன் ஓவிய


    மேலும்,பார்த்தவுடன் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் ஒவ்வொரு பிரபலத்தின் உருவத்தை சுற்றிலும் இசை நடனம் நகைச்சுவை என அவர்கள் எந்தத் துறையில் வல்லவர்கள் என்பதை சித்தரிக்கும் வகையில் சிறிய அளவிலான ஓவியமும் வரைந்து அசத்தியுள்ளனர். கடந்த ஜூலை 21-ந்தேதி தொடங்கிய முயற்சியில் நேற்றுமுன்தினம் முடித்துள்ளனர். மொத்தம் 450 சதுர அடி பரப்பில் ஓவியம் வரையப்பட்டுள்ளது.

    இதுகுறித்து கல்லூரி முதன்மை டிசைனர் பூபதி விஜய் கூறும்போது”2 மாணவர்கள் 18 நாட்கள் முயற்சித்து புதுமையான ஓவியத் தொகுப்பில் வரைந்துள்ளனர். அனைவரையும் கவர்ந்து இழுக்க செய்யும் வகையில் பலவித வண்ணங்களில் கேலிச் சித்திரம் போன்ற உருவ அமைப்புடன் பிரபலங்களின் ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன. இவை ஒவ்வொன்றையும் அடிப்படையாகக் கொண்டு ஆயத்த ஆடைகளின் பிரிண்டிங் எம்ப்ராய்டரி டிசைன்களாக இடம்பெறச் செய்ய முடியும்”என்றார். 
    Next Story
    ×