search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பள்ளிக் கல்வித்துறை வளாகம்
    X
    பள்ளிக் கல்வித்துறை வளாகம்

    எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவு இன்று வெளியீடு

    எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு முடிவு இன்று வெளியாகிறது. காலை 9.30 மணிக்கு தேர்வு முடிவுகள் தெரியவரும்.
    சென்னை:

    கொரோனா நோய்த்தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் நடைபெறுவதாக இருந்த எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. அசாதாரண சூழல் நிலவியதை தொடர்ந்து, தேர்வு ரத்து செய்யப்பட்டது. எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுத இருந்த மாணவ-மாணவிகளுக்கு காலாண்டு, அரையாண்டு தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலும், வருகைப்பதிவேட்டின் அடிப்படையிலும் மதிப்பெண் வழங்கப்படும் என்று அரசு தெரிவித்தது.

    அதன்படி, எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு முடிவு இன்று (திங்கட்கிழமை) காலை 9.30 மணிக்கு வெளியாக இருக்கிறது. தேர்வு முடிவுகளை மாணவ-மாணவிகள் www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in என்ற இணையதளங்களில் சென்று தங்களுடைய மதிப்பெண் விவரங்களை உள்ளிட்டு, தெரிந்துக்கொள்ளலாம்.

    மேலும் மாணவர்கள் தங்களுடைய உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டு இருந்த செல்போன் எண்ணுக்கு தேர்வு முடிவு எஸ்.எம்.எஸ். (குறுந்தகவல்) அனுப்பி வைக்கப்பட இருக்கிறது. அதில் பார்த்தும் தேர்வு முடிவுகளை மாணவர்கள் தெரிந்துகொள்ளலாம்.

    அதேபோல், மாணவர்களின் மதிப்பெண் பட்டியலை இன்று காலை 10 மணியில் இருந்து பதிவிறக்கம் செய்து, வைத்துக்கொள்ள அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு அளிக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வருகிற 17-ந்தேதி முதல் 21-ந்தேதி வரை அந்தந்த பள்ளிகளில் வழங்கப்பட இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை பள்ளி கல்வித்துறை செய்துவருகிறது.
    Next Story
    ×