search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    கும்மிடிப்பூண்டி அருகே ஆட்டோவில் மதுபானம் கடத்திய 4 பேர் கைது

    கும்மிடிப்பூண்டி அருகே ஆட்டோவில் மதுபானம் கடத்திய 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கும்மிடிப்பூண்டி:

    திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த கவரைப்பேட்டை அருகே உள்ள போரக்ஸ் மற்றும் தச்சூர் ஆகிய இடங்களில் நேற்று சப்-இன்ஸ்பெக்டர் திருமுருகன் தலைமையில் கவரைப்பேட்டை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.

    அப்போது அந்த வழியாக சென்னை நோக்கி சென்ற 2 ஆட்டோக்களையும், 2 மோட்டார் சைக்கிள்களையும் போலீசார் சந்தேகத்தின் பேரில், நிறுத்தி சோதனை செய்தனர்.

    அதில் ஒரு ஆட்டோவில் 49 மதுபாட்டில்களும், மற்றொரு ஆட்டோவில் 39 மதுபாட்டில்களும் சென்னைக்கு கடத்தப்படுவது தெரியவந்தது. அதே போல 2 மோட்டார் சைக்கிள்களிலும் சேர்த்து 82 மதுபாட்டில்கள் கடத்தி செல்வது தெரியவந்தது.

    இது குறித்து கவரைப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆட்டோ டிரைவர்களான சென்னை பெரம்பூரை சேர்ந்த விஜயகுமார் (வயது 43), பெரவள்ளூரை சேர்ந்த பாஸ்கர் (56), மோட்டார் சைக்கிள் வந்த அயனாவரத்தை சேர்ந்த நாதன் (35) மற்றும் பிராட்வேயை சேர்ந்த சுரேஷ் (42) ஆகிய 4 பேரை கைது செய்தனர். 2 ஆட்டோ, 2 மோட்டார் சைக்கிள் உள்பட மொத்தம் 170 மது பாட்டில்களையும் கவரைப்பேட்டை போலீசார் பறிமுதல் செய்தனர்.
    Next Story
    ×