search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோவில்பட்டியில் பறிமுதல் செய்த புகையிலை பொருட்களையும், கைதானவர்களையும் படத்தில் காணலாம்.
    X
    கோவில்பட்டியில் பறிமுதல் செய்த புகையிலை பொருட்களையும், கைதானவர்களையும் படத்தில் காணலாம்.

    கோவில்பட்டியில் குடோனில் பதுக்கிய ரூ.5 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல்

    கோவில்பட்டியில் குடோனில் பதுக்கிய ரூ.5 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து, 2 பேரை கைது செய்தனர்.
    கோவில்பட்டி:

    கோவில்பட்டியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே அவரது உத்தரவின்பேரில், கோவில்பட்டியை துணை போலீஸ் சூப்பிரண்டு கலைக்கதிரவன் மேற்பார்வையில், கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுதேசன், சப்-இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீஸார் இலுப்பையூரணி பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான குடோனில் திடீர் சோதனை நடத்தினர்.

    அப்போது அங்கு ரூ.5 லட்சம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை மூட்டைகளில் பதுக்கி வைத்து இருந்தது தெரிய வந்தது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக கோவில்பட்டி-இளையரசனேந்தல் ரோடு ஒக்கடுராம் மகன் ராகேஷ் (30), கோபால்செட்டி தெருவைச் சேர்ந்த மாரியப்பன் மகன் மணிகண்டன் (22) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து புகையிலை பொருட்களை கடத்தி வைத்து குடோனில் பதுக்கியது தெரிய வந்தது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதற்கிடையே கோவில்பட்டி இலுப்பையூரணி மயான பகுதியில் கஞ்சா விற்ற, கோவில்பட்டி மறவர் காலனியை சேர்ந்த சுடலைமுத்து மகன் குமாரை (19) போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்த 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
    Next Story
    ×