search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
    X
    திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

    இடுக்கி நிலச்சரிவில் பலி எண்ணிக்கை 37 ஆக உயர்வு: ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் - திமுக

    இடுக்கி நிலச்சரிவில் பலியானோரின் எண்ணிக்கை 37 ஆக உயர்ந்துள்ள நிலையில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
    கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் உள்ள ராஜமலை பகுதியில் கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டது. ராஜமலை பெட்டிமுடி கன்ணண் தேவன் டீ எஸ்டேட்டில் நடந்த நிலச்சரிவில் சுமார் 20 வீடுகள் மண்ணில் புதைந்தன. தேயிலை தோட்ட தொழிலாளர்கள் 80-க்கும் மேற்பட்டோர் காணவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

    வீடுகளுடன் மண்ணுக்குள் புதையுண்டவர்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. 200-க்கும் மேற்பட்ட தேசிய பேரிடர் மீட்புப்படையினர் மீட்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று வரை மண்ணுக்குள் புதைந்து 26 பேர் உயிரிழந்தனர்.

    மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் காலை வரை 29 பேர் உயிரிழந்த நிலையில், மேலும்  மண்ணுக்குள் புதையுண்ட 9 பேரின் உடல்களை மீட்புப்படையினர் மீட்டனர்.  இதனால் தற்போது நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 37 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வீடுகளுடன் மண்ணுக்குள் புதையுண்டவர்களை மீட்கும்  மீட்புப்பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    சற்றுமுன்னதாக மூணாறு நிலச்சரிவில் தமிழக தொழிலாளர்கள் உயிரிழந்தது தொடர்பாக கேரள முதல்வர் பினராயி விஜயனுடன் தமிழக முதல்வர் பழனிசாமி பேசினார்.  மீட்பு, நிவாரணப் பணிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளை செய்யத் தயாராக உள்ளதாக அம்மாநில முதல்வருக்கு உறுதியளித்ததாக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில் இடுக்கி நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க  வேண்டும் என கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயனிடம் திமுக தலைவர் முக ஸ்டாலின் கூறியுள்ளார்.

    மேலும் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தமிழக அரசின் சார்பிலும் நிதியுதவி அளிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.  மண்ணில் புதைந்து கிடக்கும் அனைவரையும் விரைந்து மீட்க மீட்பு பணிகளை துரிதப்படுத்த வேண்டும்  என முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 
    Next Story
    ×