search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    கைது
    X
    கைது

    பாளையங்கோட்டை அருகே காதல் ஜோடியை மிரட்டி பணம் பறித்த வாலிபர் கைது

    பாளையங்கோட்டை அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த காதல் ஜோடியை மிரட்டி பணம் பறித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    நெல்லை:

    பாளையங்கோட்டை அருகே உள்ள ரெட்டியார்பட்டி மலைப்பகுதில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மேலப்பாளையத்தை சேர்ந்த ஒருவர், தனது காதலியுடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார். பின்னர் அந்த காதல் ஜோடி அங்கு நின்று பேசிக்கொண்டு இருந்தனர்.

    அப்போது அந்த வழியாக வந்த 3 பேர், காதல் ஜோடியை மிரட்டி செல்போனில் படம் எடுத்துவிட்டு அவர்களிடம் இருந்து செல்போன், பணம், ஏ.டி.எம்.கார்டு ஆகியவற்றை பறித்துவிட்டு சென்றுவிட்டனர். இந்த சம்பவம் நெல்லை மாநகர பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதுகுறித்து பாளையங்கோட்டை குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி காதல் ஜோடியை மிரட்டி பணம் பறித்ததாக கீழமுன்னீர்பள்ளத்தை சேர்ந்த அருணாசலம் (வயது 20) என்பவரை கைது செய்தனர். மேலும் 2 பேரை தேடி வருகிறார்கள்.
    Next Story
    ×