என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
X
திருவையாறு அருகே விஷவண்டு கடித்து மூதாட்டி பலி
Byமாலை மலர்9 Aug 2020 7:46 AM GMT (Updated: 9 Aug 2020 7:46 AM GMT)
திருவையாறு அருகே தென்னந்தோப்பில் நடந்து சென்று கொண்டிருந்த மூதாட்டியை விஷவண்டு கடித்ததில் பரிதாபமாக உயிரிழந்தார்.
திருவையாறு:
திருவையாறு அருகே சின்னகண்டியூரை சேர்ந்தவர் சரோஜா (வயது 80). இவர் கடந்த 6-ந் தேதி தென்னந்தோப்பில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு கூடு கட்டியிருந்த விஷவண்டு சரோஜாவை கடித்தது. இதில் மயங்கி விழுந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருவையாறு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் சரோஜா பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து திருவையாறு போலீசில் சரோஜா மகன் சுப்பிரமணியன் கொடுத்த புகாரின்பேரில் திருவையாறு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக் வழக்குப்பதிவு செய்து, சரோஜா உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×