search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமோனியம் நைட்ரேட்
    X
    அமோனியம் நைட்ரேட்

    10 கன்டெய்னர் மூலம் 200 டன் அம்மோனியம் நைட்ரேட் இன்று ஐதராபாத் செல்கிறது

    சென்னை மணலி கிடங்கில் இருந்த 740 டன் அமோனியம் நைட்ரேட்டை அப்புறப்படுத்தும் பணியில் இன்று 10 கன்டெய்னர் மூலம் 200 டன் அம்மோனியம் நைட்ரேட் இன்று ஐதராபாத் செல்கிறது
    சென்னை:

    தென்கொரியாவில் இருந்து சென்னைக்கு இறக்குமதி செய்யப்பட்ட அமோனியம் நைட்ரேட் சென்னை துறைமுகத்தில் சுங்கத்துறையின் சில சட்ட பிரச்சினைகள் காரணமாக சென்னை மணலியில் உள்ள சரக்கு கன்டெய்னர் முனையத்தில் வைக்கப்பட்டது. கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு 37 கன்டெய்னர்களில் 740 டன் அளவுக்கு இந்த அமோனியம் நைட்ரேட் இருந்தது. 2015-ம் ஆண்டு வெள்ளத்தின்போது அடித்துச்செல்லப்பட்டதாலும், அமோனியம் நைட்ரேட் ஆவியானதாலும் 50 டன் குறைந்து, தற்போது 690 டென் என்ற அளவில் இருக்கிறது.

    இந்தநிலையில், லெபனான் நாட்டின் பெய்ரூட்டில் துறைமுகத்தில் வைக்கப்பட்டு இருந்த அமோனியம் நைட்ரேட் வெடித்து பயங்கர விபத்தை ஏற்படுத்தியதால், தற்போது சென்னை மணலி சரக்கு கன்டெய்னர் முனையத்தில் வைக்கப்பட்டு இருக்கும் அமோனியம் நைட்ரேட் பக்கம் அனைவருடைய பார்வையும் திரும்பியது. இந்தநிலையில் மாசுகட்டுப்பாட்டு வாரியம், நேற்று முன்தினம் அமோனியம் நைட்ரேட்டை உடனடியாக அங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்று சுங்கத்துறைக்கு பரிந்துரைத்தது. அதன் அடிப்படையில் அமோனியம் நைட்ரேட்டை அங்கிருந்து அப்புறப்படுத்தும் பணி இன்று தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.  ஐதராபாத் நிறுவனம், இந்த அமோனியம் நைட்ரேட்டை கொண்டு செல்லப்பட இருப்பதாகவும், அதிகபட்சமாக 3 நாட்களுக்குள் இந்த பணிகள் நிறைவடையும் என்று தெரிவிக்கப்பட்டது.

    இந்நிலையில்  சென்னை மணலி கிடங்கில் இருந்த 740 டன் அமோனியம் நைட்ரேட்டை அப்புறப்படுத்தும் பணி இன்று தொடங்க உள்ள நிலையில் அடுத்த 3 நாட்களுக்குள் நிறைவடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  முதற்கட்ட அப்புறப்படுத்தும் பணியில் 10 கண்டெய்னர் லாரிகள் மூலம் ஹைதராபாத்துக்கு எடுத்து செல்லப்படுகிறது.  

    ஹைதராபாத் தனியார் நிறுவனம் ஏலம் எடுத்துள்ளதால் பாதுகாப்பான முறையில் அப்புறப்படுத்தும் பணி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  சாலைமார்கமாக எடுத்து செல்லப்படும் அமோனியம் நைட்ரேட் அப்புறப்படுத்தும் பணிக்கு காவல்துறை பாதுகாப்பு அளிக்கிறது.  
    Next Story
    ×