search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வடதாரம் கிராமத்தில் திருட்டு நடந்த டாஸ்மாக் கடையை படத்தில் காணலாம்.
    X
    வடதாரம் கிராமத்தில் திருட்டு நடந்த டாஸ்மாக் கடையை படத்தில் காணலாம்.

    செஞ்சி அருகே டாஸ்மாக் கடை பூட்டை உடைத்து ரூ.32 ஆயிரம் மதுபாட்டில்கள் திருட்டு

    செஞ்சி அருகே டாஸ்மாக் கடை பூட்டை உடைத்து ரூ.32 ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில்களை திருடிச்சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
    செஞ்சி:

    செஞ்சி அருகே உள்ள வடதாரம் கிராமத்தில் விவசாய நில பகுதியில் டாஸ்மாக் கடை உள்ளது. இங்கு மது குடிக்க வரும் மதுபிரியர்கள், காலி மதுபாட்டில்களை வயலில் வீசிவிட்டு செல்வதாகவும், பயிர்களை மிதித்து நடந்து செல்வதால் விவசாயம் பாதிக்கப்படுவதாகவும் கூறி விவசாயிகள் போராட்டம் நடத்தினர். அந்த டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என்பதே விவசாயிகளின் கோரிக்கையாகும்.

    இந்த நிலையில் கடந்த 20 நாட்களுக்கு முன்பு டாஸ்மாக் கடையின் பின்பக்க சுவரில் துளையிட்டு, ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் திருடுபோனது. இது தொடர்பாக செஞ்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் அதே டாஸ்மாக் கடையில் மர்மநபர்கள் மீண்டும் தங்களது கைவரிசையை காட்டியுள்ளனர். அது பற்றிய விவரம் வருமாறு:-

    நேற்று முன்தினம் இரவு வியாபாரம் முடிந்ததும் விற்பனையாளர் தோபியாஸ், டாஸ்மாக் கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்று விட்டார். நேற்று வந்து பார்த்தபோது, கடையின் ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. கடையில் இருந்த ரூ.32 ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில்களை காணவில்லை.

    இது பற்றி தகவல் அறிந்ததும் செஞ்சி போலீசார் விரைந்து சென்று பார்த்தனர். அப்போது, டாஸ்மாக் கடையின் பின்பக்க சுவரில் துளை போட முயன்றதற்கான அடையாளம் இருந்தது. நள்ளிரவில் மர்மநபர்கள், டாஸ்மாக் கடையின் பின்பக்க சுவரில் துளையிட முயன்றுள்ளனர். ஆனால் அவர்களால் முடியாததால், ஷட்டர் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து மதுபாட்டில்களை திருடிச்சென்றது தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×