search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டவுசர் கொள்ளையர்கள்
    X
    டவுசர் கொள்ளையர்கள்

    அடுத்தடுத்த வீடுகளுக்குள் புகுந்து திருட முயன்ற டவுசர் கொள்ளையர்கள்

    கோவையில் அடுத்தடுத்த வீடுகளுக்குள் புகுந்து டவுசர் கொள்ளையர்கள் திருட முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    கோவை:

    கோவையை அடுத்த இருகூர் தீபம் நகரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு டவுசர் மட்டும் அணிந்து கொண்டு 7 கொள்ளையர்கள் நடமாடினர். அவர்கள் அங்குள்ள ஒரு பங்களா வீட்டை நோட்டமிட்டபடி செல்லும் காட்சி கண்காணிப்பு கேமராவில் பதிவானது. இது குறித்த புகாரின் பேரில் சிங்காநல்லூர் போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்தினர். ஆனாலும் டவுசர் கொள்ளையர்கள் பிடிபடவில்லை.

    இந்த நிலையில் 25-ந் தேதி அதிகாலை 1.30 மணியளவில் பீளமேடு பாலகுரு கார்டன் பகுதியில் டவுசர் கொள்ளையர்கள் 3 பேரின் நடமாட்டம் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவானது. அவர்கள் டவுசர் மட்டும் அணிந்து இருப்பதுடன், முகமூடியும் அணிந்து இருந்தனர். இதையடுத்து சிங்காநல்லூர் மற்றும் பீளமேடு போலீசார் தீவிர ரோந்து சுற்றி கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    இருகூரில் உள்ள ஒரு பூட்டிய வீட்டில் நேற்று முன்தினம் இரவு டவுசர் கொள்ளையர்கள் புகுந்தனர். அங்கு பொருட்கள் எதுவும் சிக்காததாலும் டவுசர் கொள்ளையர்கள், அங்குள்ள மற்றொரு வீட்டுக்குள் சென்று திருட முயன்றனர். அப்போது சத்தம் கேட்டு வீட்டில் இருந்தவர்கள் எழுந்து விளக்குகளை போட்டனர். உடனே டவுசர் கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.இது குறித்து அந்த வீட்டின் உரிமையாளர்கள் கொடுத்த புகாரின் பேரில் சிங்காநல்லூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசார ணை நடத்தினர். 

    மேலும் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளையும் ஆய்வு செய்தனர்.வீடுகளுக்குள் புகுந்து டவுசர் கொள்ளையர்கள் திருட முயன்றது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. எனவே டவுசர் கொள்ளையர்களின் அட்டகாசத்தை தடுக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்தனர். இது குறித்து போலீசார் கூறும்போது, டவுசர் கொள்ளையர்களை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அடுத்தடுத்த வீடுகளில் திருட முயன்றது டவுசர் கொள்ளையர்களா? அல்லது வேறு கும்பலா? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றனர்.

    Next Story
    ×