search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வானிலை ஆய்வு மையம்
    X
    வானிலை ஆய்வு மையம்

    நீலகிரி, கோவை, தேனிக்கு ரெட் அலர்ட்- சென்னை வானிலை மையம்

    அதீத கனமழை பெய்யும் என்பதால் நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
    சென்னை:

    தென்மேற்கு பருவகாற்று காரணமாக நீலகிரி, கோவையில் கடந்த 3 தினங்களாக மழை வெளுத்து வாங்கி வருகிறது. அதுவும் நீலகிரியில் பலத்த காற்றுடன் மழை பெய்கிறது. கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் இதேபோல் தென்மேற்கு பருவமழை காலத்தில் நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் ஒரே நாளில் 91 செ.மீ. மழை பதிவாகி அனைவரையும் வியப்படைய செய்தது. அதேபோல், இந்த ஆண்டும் மழை பொழிந்து வருகிறது.

    இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

    தென்மேற்கு பருவகாற்று மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தீவிரம் அடைந்துள்ளது. நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களில் அதீத கனமழை பெய்யும் என்பதால் ரெட் அலர்ட்  விடுக்கப்பட்டுள்ளது. இதேபோல் வருகிற 10-ந் தேதி வரை இந்த பகுதிகளில் கன மழைக்கான வாய்ப்பு இருக்கிறது.

    நெல்லை, தூத்துக்குடி, குமரி, தென்காசியில் மிக கனமழை பெய்யும். சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, திண்டுக்கல், வேலூர் மாவட்டத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

    கடலில் 3.5 மீட்டரில் இருந்து 4.2 மீட்டர் உயரம் வரை அலைகள் எழும்பக்கூடும்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×