search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காட்சி
    X
    பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காட்சி

    தர்மபுரியில் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

    4-ஜி சேவையை உடனே தொடங்க கோரி தர்மபுரியில் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    தர்மபுரி:

    தேசிய தொலைதொடர்பு ஊழியர் சம்மேளனத்தின் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி தர்மபுரி தொலைபேசி நிலையம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சம்மேளன மாவட்ட துணை செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் மணி, டி.என்.பி.யூ. சங்க முன்னாள் மாநில அமைப்பு செயலாளர் தங்கராஜ், ஓய்வு பெற்ற ஊழியர் சங்க பொருளாளர் வணங்காமுடி, நிர்வாகி அம்மாசி உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள்.

    பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்களுக்கு 4-ஜி சேவையை உடனடியாக தொடங்கி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒப்பந்த ஊழியர்களுக்கு 10 மாதங்களாக வழங்கப்படாமல் உள்ள ஊதிய நிலுவைத்தொகையை வழங்க வேண்டும். நிரந்தர ஊழியர்களுக்கு மாதந்தோறும் குறிப்பிட்ட காலத்தில் ஊதியத்தை வழங்க வேண்டும். தொலைதொடர்பு பணிகளை அவுட்சோர்சிங் முறையில் ஒப்பந்தம் விடும் முறையை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். செல்போன் கோபுரங்களை தொழில்நுட்ப ரீதியாக மேம்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும். பி.எஸ்.என்.எல். அலுவலகங்களில் பயன்படுத்தப்படும் கருவிகளை தேவையான அளவில் தடையின்றி வழங்க நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×