search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னை மாநகராட்சி
    X
    சென்னை மாநகராட்சி

    சென்னையில் 12,190 பேருக்கு கொரோனா சிகிச்சை- மாநகராட்சி

    சென்னையில் கொரோனா உறுதியான 1,01,951 பேரில் 12,190 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    சென்னை:

    தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது. இருப்பினும் குணமடைவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது. மற்ற மாவட்டங்களை விட சென்னையில் தான் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது.

    தமிழகத்தில் நேற்று 5 ஆயிரத்து 879 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 1,065 பேருக்கு நேற்று புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் சென்னையில் கொரோனா உறுதியான 1,01,951 பேரில் 12,190 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் கொரோனா பாதிப்பால் 2,157 பேர் உயிரிழந்துள்ளனர்.

    சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 87,604 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது. 59.37% ஆண்கள், 40.63% பெண்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    15 மண்டலங்களில் அதிகபட்சமாக கோடம்பாக்கத்தில் 1,394 பேருக்கு கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இன்று காலை நிலவரப்படி கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவோர் விபரம்:

    அண்ணாநகர் - 1,288
    தேனாம்பேட்டை - 918
    ராயபும் - 837
    திரு.வி.க.நகர் - 944
    தண்டையார்பேட்டை - 666
    வளசரவாக்கம் -926
    திருவொற்றியூர் - 460
    மணலி - 113
    மாதவரம் - 638
    அம்பத்தூர் - 1,338
    ஆலந்தூர் - 566
    அடையாறு - 1,011
    பெருங்குடி - 515
    சோழிங்கநல்லூர் -459 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    Next Story
    ×