search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கூட்டத்தில் தளவாய்சுந்தரம் பேசிய போது எடுத்த படம்.
    X
    கூட்டத்தில் தளவாய்சுந்தரம் பேசிய போது எடுத்த படம்.

    குமரி மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்- தளவாய்சுந்தரம் பங்கேற்பு

    குமரி மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சுசீந்திரத்தில் நடந்தது. இதில் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம் கலந்து கொண்டு பேசினார்.
    கன்னியாகுமரி:

    குமரி மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சுசீந்திரம் தேரூரில் உள்ள அசோகா மஹாலில் நேற்று நடந்தது. தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர்கள் எஸ்.ஏ.அசோகன், ஜாண்தங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியில், தளவாய்சுந்தரம் பேசும் போது கூறியதாவது:-

    குமரி மாவட்டத்தில் கொரோனா பரவுவதை தடுக்கும் வகையிலும், ஊரடங்கு காலத்தில் மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்குவதிலும், கொரோனா நோயாளிகளுக்கு மருத்துவம் மற்றும் உணவு வழங்குவதிலும் தமிழக அரசு சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறது. இந்த பணியில் குமரி மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள்.

    குமரி மாவட்ட அ.தி.மு.க. சார்பில் ஊரடங்கு காலத்தில் ஞாயிற்றுக்கிழமை தோறும் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் கொரோனா நோயாளிகளுக்கு மூலிகை கலந்த கோழி பிரியாணி வழங்கப்பட்டு வருகிறது. இதேபோல யார் வேண்டுமானாலும் தாங்களாகவே முன்வந்து கொரோனா நோயாளிகளுக்கு உணவு வழங்கலாம். குமரி மாவட்டத்தில் கொ ரோனா நோயாளிகளுக்காக 3 ஆம்புலன்ஸ் ஒதுக்கப்பட்டு உள்ளது. இதில் 2 ஆம்புலன்ஸ் வழங்கப்பட்டு விட்டது.

    அ.தி.மு.க.வில் புதிய கிளை உறுப்பினர் சேர்க்கும் பணிகள் நடந்து வருகிறது. எனவே கட்சி நிர்வாகிகள் இதற்கான விண்ணப்ப படிவங்களை பெற்று வருகிற 10-ந்தேதிக்குள் புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும். வருகிற சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.வின் வெற்றிக்காக நாம் அனைவரும் ஒற்றுமையுடன் பாடுபடவேண்டும்.

    இவ்வாறு தளவாய்சுந்தரம் கூறினார்.

    கூட்டத்தில், குமரி கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர்கள் எஸ்.ஏ. அசோகன் மற்றும் ஜாண்தங்கம் ஆகியோர் பொறுப்பு ஏற்று 2 ஆண்டுகள் முடிந்து 3-வது ஆண்டு தொடங்க இருப்பதையொட்டி அவர்களை பாராட்டி தளவாய்சுந்தரம் தெர்மல் ஸ்கேனர் கருவியை நினைவு பரிசாக வழங்கினார்.

    கூட்டத்தில், கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன:-

    ஈரான் நாட்டில் சிக்கி தவித்த குமரி மாவட்ட மீனவர்களை சொந்த ஊருக்கு அழைத்து வர ஏற்பாடு செய்த தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம்.

    கொரோனா பாதித்த பகுதிகளுக்கு சென்று 5 கிலோ அரிசி, காய்கறிகள் மற்றும் வீட்டுக்கு தேவையான பொருட்களை வழங்கி வரும் அ.தி.மு.க. நிர்வாகிகள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.

    என்பது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    நிகழ்ச்சியில், மாவட்ட அவைத்தலைவர் சேவியர் மனோகரன், குமரி மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் கிருஷ்ணகுமார், மாவட்ட பொருளாளர் திலக், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் மெர்லியன்று தாஸ், ஒன்றிய செயலாளர் அழகேசன், அணிச்செயலாளர்கள் சுகுமாரன், ஜெஸீம், பேரூர் செயலாளர்கள் வின்ஸ்டன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் குமரி மேற்கு மாவட்ட அ.தி.மு.க. துணை செயலாளர் மேரி கமலாபாய் நன்றி கூறினார்
    Next Story
    ×