search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அதிநவீன ஆவின் பாலக புதிய கட்டிடம் கட்டுவதற்கான பணிகளை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்த போது எடுத்த படம்.
    X
    அதிநவீன ஆவின் பாலக புதிய கட்டிடம் கட்டுவதற்கான பணிகளை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்த போது எடுத்த படம்.

    ஆர்.எஸ்.புரத்தில் ரூ.1.20 கோடியில் அதிநவீன ஆவின் பாலக புதிய கட்டிடம்

    ஆர்.எஸ்.புரத்தில் ரூ.1.20 கோடியில் அதிநவீன ஆவின் பாலக கட்டிடம் கட்டுவதற்கான பணிகளை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார்.
    கோவை:

    கோவை ஆர்.எஸ்.புரத்தில் அதிநவீன ஆவின் பாலகத்துக்கு புதிய கட்டிடம் கட்ட பூமிபூஜை நேற்றுக்காலை நடந்தது. இதில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்து கொண்டு பூமி பூஜை செய்து கட்டிட பணியை தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கொரோனா காரணமாக ஊரடங்கு அமலில் உள்ள நிலையிலும், பால் வழங்கும் பணியை ஆவின் நிறுவனம் தடையின்றி செய்து வருகிறது. தேவைப்படும் இடங்களில் தற்காலிகமாக ஆவின் கடைகள் அமைத்தும், நடமாடும் பாலகங்கள் ஏற்படுத்தியும், பால் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கோவை மாவட்டத்தில் உள்ள 346 பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களிடம் இருந்து 1,90,000 லிட்டர், திருப்பூர் மாவட்டத்தில் 240 சங்கங்களிடம் இருந்து 1 லட்சத்து 13 ஆயிரம் லிட்டர் என மொத்தம் 3 லட்சத்து 3 ஆயிரம் லிட்டர் பால் நாள் ஒன்றுக்கு கொள்முதல் செய்து பதப்படுத்தப்படுகிறது.

    அரசு எடுத்த பல்வேறு நடவடிக்கைகள் மூலம் கோவை மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் சங்கங்களில் பால் உற்பத்தி தற்போது நாள் ஒன்றுக்கு 1 லட்சத்து 90 ஆயிரம் லிட்டர் அதிகரித்துள்ளது. நாள் ஒன்றுக்கு 1 லட்சத்து 42ஆயிரம் லிட்டராக இருந்த ஆவின் பால் விற்பனை தற்போது 1 லட்சத்து 60 ஆயிரம் லிட்டராக அதிகரித்துள்ளது. கோவை மாவட்டத்தில் ஆவின் பால் உபயோகபொருட்களின் விற்பனை மாதம் ரூ.1 கோடியாக இருந்தது, தற்போது ரூ.1.60 கோடியாக உயர்ந்துள்ளது. மேலும் பால் உற்பத்தியாளர்கள் பயன்பெறும் வகையில் கால்நடை கலப்பு தீவனம் கிலோ ஒன்றுக்கு ரூ.6 வீதம் மானியத்துடன் வழங்கப்பட்டு வருகிறது.

    சுந்தராபுரம், போத்தனூர், பொள்ளாச்சி ஆகிய பகுதி நுகர்வோர் மற்றும் முகவர்கள் பயன்படும் வகையில் சுந்தராபுரம் பகுதியில் புதிதாக மண்டல அலுவலகம் தொடங்கப்பட்டுள்ளது. தமிழக அரசு அறிவித்துள்ள திட்டத்தின்படி, கோவை மாவட்டத்தில் முக்கிய இடங்களில் தலா ரூ.5.50 லட்சம் மதிப்பில் மொத்தம் 27 இடங்களில் ஆவின் பாலகம் அமைக்கப்பட்டு வருகிறது.

    அதன் தொடர்ச்சியாக, ஆர்.எஸ்.புரத்தில் ரூ.1.20 கோடியில் 3,306 சதுர அடி பரப்பளவில் அதி நவீன பாலகம் அமைக்கப்பட உள்ளது. இங்கு, நுகர்வோர்களின் வாகன நிறுத்துமிடம், குழந்தைகளுக்கான விளையாட்டு மைதானம், சிறிய நீர்வீழ்ச்சி போன்றவை அமைக்கப்பட உள்ளது. இங்கு 24 மணி நேரமும் ஆவின் பால் மற்றும் பால் உபபொருட்கள் கிடைக்கும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அதிகாரி ராம துரைமுருகன், ஆவின் தலைவர். கே.பி.ராஜூ, முன்னாள் அமைச்சர் பா.வெ.தாமோதரன், பொது மேலாளர்கள் ஆர்.ரவிக்குமார், சங்கீதா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×