என் மலர்

  செய்திகள்

  சீமான்
  X
  சீமான்

  அவதூறு வழக்கு- சீமான் மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அவதூறு வழக்கை ரத்து செய்யக்கோரி சீமான் தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
  சென்னை:

  தமிழக முதல்வரை விமர்சித்ததாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது முதல்வர் சார்பில் அவதூறு வழக்கு தொடரப்பட்டிருந்தது. 2019 ஜூலையில் பேசியது தொடர்பாக சீமான் மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டிருந்தது.

  இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி சீமான் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அவர் தனது மனுவில், முதல் அமைச்சரை பற்றி தனிப்பட்ட முறையில் தான் விமர்சனம் செய்யவில்லை எனவும் பொது வாழ்க்கையில் அவரது பணி தொடர்பான நடவடிக்கைகளை தான் விமர்சனம் செய்ததாக குறிப்பிட்டுள்ளார். அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள பேச்சு சுதந்திரத்தின் அடிப்படையில்தான் பேசியதாகவும், அதனால், இந்த வழக்கை ரத்து செய்யவேண்டும் என்று கூறியிருந்தார்.

  இந்த வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், முதல் அமைச்சர் குறித்து சீமான் கடுமையாக வார்த்தைகள் கொண்டு அவதூறாக பேசியதாக தெரிவித்தார். இதை ஏற்ற நீதிபதி, சீமான் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
  Next Story
  ×