search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைதான சைகுல், முகமது சரபாத், முகமது ஜினீத்.
    X
    கைதான சைகுல், முகமது சரபாத், முகமது ஜினீத்.

    ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி - வடமாநிலத்தை சேர்ந்த 3 பேர் கைது

    புதுச்சத்திரம் அருகே ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட வழக்கில் வடமாநிலத்தை சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் அருகே உள்ள பாச்சலில் தனியார் கல்லூரி நுழைவுவாயில் அருகே யூனியன் பேங்க் ஆப் இந்தியா வங்கியின் ஏ.டி.எம். மையம் செயல்பட்டு வருகிறது. கடந்த 5-ந் தேதி இந்த ஏ.டி.எம். மையத்திற்குள் நுழைந்த மர்ம நபர்கள் ஏ.டி.எம். எந்திரத்தை கியாஸ் வெல்டர் மூலம் உடைத்து பணத்தை கொள்ளை அடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். 

    இதில் ஏ.டி.எம். எந்திரத்தில் தீப்பற்றி ரூபாய் நோட்டுகள் தீயில் கருகி சேதம் அடைந்தன. இந்த கொள்ளை முயற்சி சம்பவம் தொடர்பாக புதுச்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி தலைமையில் போலீசார் தனிப்படை 
    அமைத்து கொள்ளையர்களை தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று அதிகாலை சேலம்-நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் பாச்சல் 

    பிரிவு அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சேலத்தில் இருந்து நாமக்கல் நோக்கி சென்ற வெளிமாநில டாரஸ் லாரியை போலீசார் நிறுத்தினர். இதையடுத்து டிரைவர் உள்பட 3 பேரும் கீழே இறங்கி ஓட முயன்றனர். இதைத்தொடர்ந்து 3 பேரையும் போலீசார் மடக்கி பிடித்து விசாரணை செய்தனர்.

    விசாரணையில் அவர்கள் 3 பேரும் அரியானா மாநிலத்தை சேர்ந்த முகமது சராபத் (வயது 22), சைகுல் (28), முகமது ஜினீத் (19) என்பது தெரியவந்தது. மேலும் கடந்த 5-ந் தேதி மதுரையில் லோடு இறக்கிவிட்டு, ஆந்திரா செல்வதற்காக வந்தபோது பண தேவைக்காக  ஆள்நடமாட்டம் இல்லாத பாச்சல் யூனியன் பேங்க் ஆப் இந்தியா ஏ.டி.எம். எந்திரத்தில் கொள்ளை அடிக்க முடிவு செய்ததும், கியாஸ் வெல்டிங் எந்திரம் மூலம் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்தபோது திடீரென தீப்பற்றி கொண்டதால் மூவரும் பயந்து அங்கிருந்து தப்பி சென்று இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து லாரி மற்றும் கியாஸ் வெல்டிங் எந்திரத்தை போலீசார் பறிமுதல் செய்து, வடமாநிலத்தை சேர்ந்த 3 பேரையும் கைது செய்தனர். 

    இவ்வழக்கில் சிறப்பாக செயல்பட்டு வடமாநில கொள்ளையர்களை கைது செய்த தனிப்படை போலீசாரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் பாராட்டினார்.
    Next Story
    ×