என் மலர்

  செய்திகள்

  திருமணம்
  X
  திருமணம்

  திருமணங்களில் எத்தனை பேர் பங்கேற்கலாம்?- தமிழக அரசு விளக்கம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திருமணங்களில் 50 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும் என்ற முந்தைய நடைமுறை தொடரும் என தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
  சென்னை:

  கொரோனா பரவலை தடுப்பதற்காக தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

  நோய்த்தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் தளர்வுகளுடன் ஊரடங்கு அவ்வப்போது நீட்டிக்கப்பட்டு வருகிறது. அதன்படி இதற்கு முன் கடைசியாக நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு இன்றுடன் முடிவடைவதாக இருந்தது.

  இந்த நிலையில், கொரோனா பாதிப்பு குறையாததால் ஊரடங்கை வருகிற ஆகஸ்டு 31-ந் தேதி வரை மேலும் ஒரு மாதம் நீட்டித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டு உள்ளார்.

  இந்நிலையில் திருமணங்களில் எத்தனை பேர் பங்கேற்கலாம் என்று தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

  திருமணங்களில் 50 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும் என்ற முந்தைய நடைமுறை தொடரும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

  திருமணத்தில் பங்கேற்போர் தனிமனித இடைவெளியை பின்பற்றி முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Next Story
  ×