என் மலர்

  செய்திகள்

  வீட்டில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த புகையிலை பொருட்களை படத்தில் காணலாம்.
  X
  வீட்டில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த புகையிலை பொருட்களை படத்தில் காணலாம்.

  கோவை கவுண்டம்பாளையத்தில் வீட்டில் பதுக்கிய 400 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கோவை கவுண்டம்பாளையத்தில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 400 கிலோ புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
  துடியலூர்:

  கோவை கவுண்டம்பாளையம் பகுதிகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட் கள் அதிக அளவில் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன. இதைத் தொடர்ந்து போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

  இந்த நிலையில் துடியலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுரளி சுந்தரம் தலைமையில் போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள ஒரு வீட்டில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

  அதன்பேரில் போலீசார் அந்த வீட்டுக்கு சென்று வீட்டின் பூட்டை உடைத்து திறந்து பார்த்தனர். இதில் வீட்டுக்குள் மூட்டை மூட்டையாக புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இவற்றின் மொத்த மதிப்பு ரூ.2 லட்சத்துக்கும் மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது.

  இது தொடர்பாக வீட்டின் உரிமையாளர் சந்திரசேகர் (வயது 52) என்பவரை போலீசார் கைது செய்தனர். அந்த புகையிலை பொருட்கள் எங்கிருந்து கடத்தி வரப்பட்டது? எந்தெந்த கடைகளுக்கு அவை சப்ளை செய்யப்பட்டன? அந்த வீட்டில் புகையிலை பொருட்கள் எவ்வளவு நாட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தன என்பன போன்ற விவரங்ளை போலீசார் தீவிரமாக சேகரித்து வருகின்றனர்.

  கோவை மாநகரில் போலீசார் அடிக்கடி சோதனை நடத்தி தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். அதற்கு பயந்து கோவை மாநகர போலீஸ் எல்லையையொட்டி உள்ள வீட்டில் புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருந்து நகருக்குள் கடத்தி சென்று சப்ளை செய்யப்படுகிறதா? என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

  Next Story
  ×