search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    கள்ளக்குறிச்சியில் ஒரே நாளில் 135 பேருக்கு கொரோனா

    கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று 135 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் கோரதாண்டவம் ஆடி வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் வசித்த பகுதிகளில் உள்ளவர்கள் மற்றும் தொடர்பில் இருந்தவர்கள் என 260 பேரின் கொரோனா பரிசோதனை முடிவுகள் நேற்று வெளியானது. இதில் 135 பேருக்கு தொற்று உறுதியானது. இதையடுத்து மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 498-ல் இருந்து 3 ஆயிரத்து 633-ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 24 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 1,241 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்த பாதிப்பு எண்ணிக்கையில் விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்களை மிஞ்சி புதிய உச்சத்தை தொட்டுள்ளது பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

    கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளக்குறிச்சி நகராட்சியில் 15 வார்டுகளில் உள்ள 106 தெருக்கள் மற்றும் திருக்கோவிலூர், தியாகதுருகம், உளுந்தூர்பேட்டை, சின்னசேலம், வடக்கனந்தல், சங்கராபுரம் ஆகிய 6 பேரூராட்சிகள் மற்றும் 15 கிராமங்கள் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிக்கப்பட்டு கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இங்கு யாருக்காவது காய்ச்சல், சளி, இருமல், ரத்த அழுத்தம் போன்ற அறிகுறிகள் உள்ளதா? என சுகாதாரத்துறையினர் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    Next Story
    ×