என் மலர்

  செய்திகள்

  கொரோனா பரிசோதனை  கோப்புப்படம்
  X
  கொரோனா பரிசோதனை கோப்புப்படம்

  திருவண்ணாமலையில் ஒரே நாளில் 173 பேருக்கு கொரோனா தொற்றுக்கு - 2 பேர் பலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் புதிதாக 173 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது.
  திருவண்ணாமலை:

  திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் புதிதாக 173 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. இதன் மூலம் மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 5,790 ஆக உயர்ந்துள்ளது. மேலும் தொற்றுக்கு 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

  திருவண்ணாமலை மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரசால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதனை கட்டுக்குள் கொண்டுவர மாவட்ட நிர்வாகம் மூலம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

  இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் திருவண்ணாமலை மாவட்டத்தில் புதிதாக 173 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

  இதில் துரிஞ்சாபுரம், கீழ்பென்னாத்தூர், தச்சூரில் தலா ஒருவர், சேத்துப்பட்டில் 2 பேர், தண்டராம்பட்டு, கலசபாக்கத்தில் தலா 3 பேர், வெம்பாக்கத்தில் 4 பேர், போளூர், செங்கத்தில் தலா 7 பேர், காட்டாம்பூண்டியில் 8 பேர், தெள்ளாரில் 10 பேர், ஆக்கூரில் 12 பேர், வந்தவாசியில் 18 பேர், திருவண்ணாமலை நகராட்சியில் 21 பேர், கிழக்கு ஆரணியில் 29 பேர், நாவல்பாக்கத்தில் 46 பேர் என மொத்தம் 173 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

  இதனையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக அரசு, தனியார் மருத்துவமனைகள் மற்றும் முகாம்களில் அனுமதிக்கப்பட்டனர். மேலும் அவர்கள் வசித்த பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 790 ஆக உயர்ந்துள்ளது.

  திருவண்ணாமலை செட்டிகுளமேட்டு தெருவை சேர்ந்த 75 வயது முதியவர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

  இதேபோல் ஆரணி கொசப்பாளையம் பகுதியை சேர்ந்த 47 வயது பெண் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வேலூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். 
  Next Story
  ×