search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வானிலை ஆய்வு மையம்
    X
    வானிலை ஆய்வு மையம்

    கோவை, நீலகிரி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- வானிலை மையம்

    கோவை, நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
    சென்னை:

    சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது:

    தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வடகடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. வேலூர், கிருஷ்ணகிரி, சேலம், தர்மபுரி, நீலகிரி, கோவை, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.

    சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

    கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சின்னக்கல்லார், வால்பாறையில் தலா 9 செ.மீ. மழைப்பதிவாகி உள்ளது.

    சின்கோனா (கோவை) - 8 செ.மீ., சித்தார் - 6 செ.மீ., தேவலா, சோலையாரில் தலா 5 செ.மீ., மழை பதிவாகி உள்ளது.

    அந்தமான், மன்னார் வளைகுடா, கடலோர கேரளா, கர்நாடகா, லட்சத்தீவு, மாலத்தீவு பகுதிகளில் பலத்த காற்று வீசும். பலத்த காற்று வீசும் பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


    Next Story
    ×