என் மலர்

  செய்திகள்

  எடப்பாடி பழனிசாமி
  X
  எடப்பாடி பழனிசாமி

  அடுத்தகட்ட நடவடிக்கைகள் என்ன?- மருத்துவ குழுவினருடன் முதலமைச்சர் ஆலோசனை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நாளையுடன் ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார்.
  சென்னை:

  கொரோனா தடுப்பு நடவடிக்கையாக வருகிற 31-ந்தேதி வரை தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. மேலும் கொரோனா பரவலை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

  தமிழகத்தில் நேற்று மேலும் 6,426 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் மேலும் 5,927 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 1,72,883 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 2,27,688-ல் இருந்து 2,34,114 ஆக உயர்ந்துள்ளது.

  இந்நிலையில், ஊரடங்கு முடிய உள்ள நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தலைமை செயலகத்தில் மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார்.

  நாளையுடன் ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.

  புதிய தளர்வுகள், கட்டுப்பாடுகள் குறித்து மருத்துவ நிபுணர்கள் பரிந்துரை அளிக்க வாய்ப்பு உள்ளது.

  Next Story
  ×