என் மலர்

  செய்திகள்

  மருத்துவ முகாம்
  X
  மருத்துவ முகாம்

  திருச்சுழி அருகே மருத்துவ முகாம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திருச்சுழி அருகே உள்ள பனையூர் பகுதியில் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியும் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
  திருச்சுழி:

  விருதுநகர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதில் திருச்சுழி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான நரிக்குடி, வீரசோழன், கல்லூரணி, ரெட்டியாபட்டி ஆகிய பகுதிகளில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. எனவே மாவட்ட நிர்வாகத்தின் அறிவுரையின் பேரில் சுகாதாரத்துறையினர் மருத்துவ முகாமினை நடத்தி வருகின்றனர். அதன்படி திருச்சுழி அருகே உள்ள பனையூர் பகுதியில் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியும் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் பனையூர், பிள்ளையார் நத்தம் மற்றும் அதனைச்சுற்றி உள்ள 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சமூக இடைவெளியுடன் கலந்து கொண்டனர். பரிசோதனை செய்தவர்கள் முடிவு வரும் வரை தனிமைப்படுத்திக் கொள்ளவும், முறையாக சமூக இடைவெளியை பின்பற்றவும், முககவசம் அணியவும் பொதுமக்களுக்கு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அறிவுரை வழங்கினர்.
  Next Story
  ×