என் மலர்

  செய்திகள்

  லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி நிற்கும் காட்சி.
  X
  லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி நிற்கும் காட்சி.

  திருப்பூரில் நள்ளிரவில் லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதல் - 2 பேர் பலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திருப்பூரில் நள்ளிரவு லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் 2 பேர் பலியானார்கள்.
  திருப்பூர்:

  திருப்பூர்-காங்கேயம் சாலையில் ஒரு தனியார் மருத்துவ மனை அருகே மின்விளக்குகளை பழுது பார்க்கும் மாநகராட்சி லாரி ஒன்று நின்று கொண்டிருந்தது. அப்போது திருப்பூரில் இருந்து காங்கேயம் நோக்கி ஒரு மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் சென்று கொண்டிருந்தனர்.

  கண் இமைக்கும் நேரத்தில் அந்த லாரியின் பின் பகுதியில் வாலிபர்கள் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் லாரிக்குள் மோட்டார் சைக்கிள் புகுந்தால் மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபர்கள் 2 பேரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். ஆனால் அவர்கள் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்கள் என்று தெரியவில்லை.

  இது பற்றிய தகவல் அறிந்ததும் திருப்பூர் தெற்கு போலீசார் விரைந்து சென்று பலியான வாலிபர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந் த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து பலியான வாலிபர்கள் யார்? என்று விசாரணை நடத்தினர். விசாரணையில் விபத்தில் பலியான வாலிபர்கள் திருப்பூர் குன்னாங்கல்காடு பகுதியை சேர்ந்த கரன் (வயது 20) மற்றும் பெரியதோட்டம் பகுதியை சேர்ந்த கரிம் (20) என தெரியவந்தது. நள்ளிரவு நேரம் லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் 2 வாலிபர்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 
  Next Story
  ×