search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ் பரிசோதனை
    X
    கொரோனா வைரஸ் பரிசோதனை

    திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 13 ஆயிரத்தை நெருங்கியது

    திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 486 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 13 ஆயிரத்தை நெருங்கியது.
    திருவள்ளூர்:

    திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13 ஆயிரத்தை நெருங்கியது. திருவள்ளூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 9 பேர், கடம்பத்தூர் ஒன்றியத்தில் 5 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.

    கும்மிடிப்பூண்டி அருகே உள்ள பூவலம்பேடு கிராமத்தில் வட்டார மருத்துவர் டாக்டர் கோவிந்தராஜ் தலைமையில் கொரோனா தொற்று பரிசோதனை நடத்தப்பட்டது. 301 பேருக்கு நடத்திய சோதனையில் 27 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. நேற்று மட்டும் கும்மிடிப்பூண்டி தாலுகாவில் மொத்தம் 53 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

    இவர்களுடன் திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 486 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர். மாவட்டம் முழுவதும் இதுவரையில் 12 ஆயிரத்து 806 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் 8,411 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். 4,173 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று ஒரே நாளில் 8 பேர் இறந்துள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை 222 ஆக உயர்ந்துள்ளது.

    செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட வள்ளல் பாரி தெருவில் வசிக்கும் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 வயதான 2 சிறுமிகள், 27 வயது இளம்பெண் உள்பட 17 பேர், நந்திவரம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட எஸ்.ஆர்.எம். மகாத்மா காந்தி தெருவில் வசிக்கும் 10 ஆண்கள், 2 பெண்கள் உள்பட 28 பேர், ஒத்திவாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட கிராம பகுதியில் 2 பேர் ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    இவர்களுடன் செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 365 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 13 ஆயிரத்து 348 ஆக உயர்ந்து உள்ளது. இவர்களில் 9,429 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நேற்று 6 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால் பலியானவர்கள் எண்ணிக்கை 239 ஆக உயர்ந்தது. 3,680 பேர் தொடர்ந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை ஊராட்சி பகுதியை சேர்ந்த 21 மற்றும் 24 வயது வாலிபர்கள், மாடம்பாக்கம் ஊராட்சி பகுதியை சேர்ந்த 37 வயது ஆண், ஒரத்தூர் பகுதியை சேர்ந்த 40 வயது பெண், மணிமங்கலம் அருகே 26 வயது இளம்பெண் ஆகியோருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.

    இவர்களுடன் காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 223 பேர் கொரோனா பாதிப்புக்கு உள்ளானார்கள். மாவட்டம் முழுவதும் இதுவரையில் 8 ஆயிரத்து 17 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களில் 4,853 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். 3 ஆயிரத்து 64 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று ஒரே நாளில் 6 பேர் இறந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 100 ஆனது.
    Next Story
    ×