search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோரிக்கை அட்டை அணிந்து பணி செய்த டாஸ்மாக் ஊழியர்கள்
    X
    கோரிக்கை அட்டை அணிந்து பணி செய்த டாஸ்மாக் ஊழியர்கள்

    விழுப்புரம் மாவட்டத்தில் கோரிக்கை அட்டை அணிந்து பணி செய்த டாஸ்மாக் ஊழியர்கள்

    விழுப்புரம் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளில் பணியாற்றும் விற்பனையாளர்கள், மேற்பார்வையாளர்கள் கோரிக்கை அட்டை அணிந்து பணி செய்தனர்.
    விழுப்புரம்:

    தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் பணி செய்து வரும் ஊழியர்கள் கொரோனா தொற்று பாதிப்புக்கு உள்ளாகி வருகிறார்கள். இதையடுத்து பணி பாதுகாப்பு, கொரோனா தொற்றால் உயிரிந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் இழப்பீடு, வாரிசுகளுக்கு அரசு பணி, கூடுதலாக ரூ.10 ஆயிரம் ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு வாரத்துக்கு கோரிக்கை அட்டை அணிந்து பணி செய்ய டாஸ்மாக் ஊழியர்கள் முடிவு செய்தனர்.

    அதன்படி நேற்று முதல் விழுப்புரம் மாவட்டத்தில் 226 கடைகளில் பணியாற்றும் விற்பனையாளர்கள், மேற்பார்வையாளர்கள் என மொத்தம் 850 பேர் கோரிக்கை அட்டை அணிந்து பணி செய்தனர். ஒருவாரத்திற்கு பிறகும் அரசு தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற முன்வரவில்லை என்றால் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளதாக ஊழியர்கள் தெரிவித்தனர். 
    Next Story
    ×