search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    சென்னையில் 20 முதல் 29 வயதினரை அதிகம் தாக்கும் கொரோனா

    சென்னையில் 20 முதல் 29 வயது பிரிவினர் 18.49 சதவீதம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
    சென்னை:

    தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 7 ஆயிரத்தை நெருங்கி வருகிறது. சென்னையில் மட்டும் சராசரியாக 1,200 முதல் 1,300 பேர் வரை பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

    சென்னையில் ஆரம்பத்தில் இருந்து கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் பட்டியலில் 30 முதல் 39 வயதுக்கு உட்பட்டவர்கள் முதலிடத்தில் இருந்து வந்தனர். இந்தநிலையில் நேற்று அவர்களை பின்னுக்கு தள்ளி 20 முதல் 29 வயதினர் பட்டியலில் முன்னேறியுள்ளனர். அதன்படி இந்த வயது பிரிவினர் 18.49 சதவீதம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    9 வயதுக்குட்பட்ட குழந்தைகள் 3.52 சதவீதமும், 10 முதல் 19 வயதினர் 8.6 சதவீதமும், 30 முதல் 39 வயதினர் 18.42 சதவீதமும், 40 முதல் 49 வயதினர் 17.83 சதவீதமும், 50 முதல் 59 வயதினர் 15.72 சதவீதமும், 60 முதல் 69 வயதுக்கு உட்பட்டோர் 10.51 சதவீதமும், 70 முதல் 79 வயதுக்கு உட்பட்டோர் 5.23 சதவீதமும், 80 வயதினருக்கு மேல் 2.13 சதவீதம் பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் ஆண்கள் 58.76 சதவீதம் பேரும், பெண்கள் 41.24 சதவீதம் பேரும் அடங்குவர்.

    இந்த தகவல் மாநகராட்சி இணையதள பக்கத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.
    Next Story
    ×